Connect with us

Cinema News

விஜயின் கடைசி படத்தில் அவருக்கு இத்தனை கோடி சம்பளமா? முதலிடத்தை தூக்கி போட கெத்து வேணும்…

Vijay: கோலிவுட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் அடையாளத்துடன் இருக்கும் விஜய் சமீபத்தில் தன் கட்சியை தொடங்கி இருக்கிறார். அதனால் சினிமாவில் இருந்து விலக இருக்கும் அவரின் கடைசி படத்தின் சம்பளம் குறித்த ஆச்சரிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் விஜய் நடிப்பில் வெளியான முதல் நாளைய தீர்ப்பு. இப்படத்தின் ரிலீஸுக்கு பின்னர் விஜய் நிறைய நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்றார். இருந்தும் தொடர்ந்து போராடி கோலிவுட்டில் தொடர் வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது.

இதையும் படிங்க: நாளைக்கு உன்ன கல்யாணம் பன்றேன்!.. சரோஜாதேவியை அதிரவைத்த சின்னப்பா தேவர்…

20களில் தன்னுடைய இடத்தினை தக்க வைத்தார். கிட்டத்தட்ட விஜயை வைத்து படம் எடுத்தால் கணிசமான வருமானம் வரும் என்ற நம்பிக்கையை உருவாக்கினார். துப்பாக்கி படத்தின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாகி அசத்தினார். வாரிசு படத்தின் தன்னுடைய சினிமா பயணத்தின் உச்சத்தினை தொட்டார்.

கிட்டத்தட்ட அடுத்த சூப்பர்ஸ்டார் பிரச்னையே உருவானது. இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் லியோ, வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என வரிசையாக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அடுத்தடுத்த படங்களுக்கு ரசிகர்கள் ஆவலாக காத்திருக்க தன்னுடைய கட்சியை அறிமுகம் செய்து வைத்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவா?.. சரோஜாதேவியா?!.. ஏ.எம்.வீரப்பன் செய்த வேலையில் கொதித்தெழுந்த எம்.ஜி.ஆர்…

ஒப்புக்கொண்ட படங்கள் முடிந்ததும் மொத்தமாக அரசியலுக்கு வருவேன் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு விட்டார். இது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அதன்படி பார்த்தால் விஜய் நடிப்பில் தளபதி69 படம் தான் கடைசி படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் இயக்குனர் வேட்டை தான் மும்முரமாக நடந்து வருகிறது. கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், அட்லீ தொடங்கி தெலுங்கு இயக்குனர் த்ரீவிக்ரம் வரை பட்டியலில் இருக்கின்றனர். இன்னும் இறுதி முடிவு எட்டப்படாமலே இருக்கின்றதாம். இப்படத்தினை தெலுங்கின் டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறதாம்..

இப்படத்திற்கு விஜயின் சம்பளமாக 200 கோடி வரை பேசப்பட்டு இருக்கிறதாம். தகவல் உண்மையாகும் பட்சத்தில் டாப் இடத்தினை விட்டு விஜய் விலகுவது பெரிய தைரியம் தான் என்ற பேச்சுகள் உருவாகி இருக்கிறது. முழு அரசியல்வாதியாக மாறுவாரா இல்லை இன்னும் சில படங்கள் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.  

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை பார்த்து ‘இவர் யார்?’ எனக்கேட்ட சரோஜா தேவி!… இப்படியெல்லாம் நடந்துச்சா!..

google news
Continue Reading

More in Cinema News

To Top