எம்.ஜி.ஆர் மீது வந்த கோபத்தில் அதிரடி முடிவெடுத்த சின்னப்ப தேவர்!.. உருவான சூப்பர் ஹிட் படம்...

by சிவா |   ( Updated:2024-01-02 01:06:57  )
MGR and Chinnappa Thevar
X

MGR and Chinnappa Thevar

Actor ranjan: எம்.ஜி.ஆரும், சின்னப்ப தேவரும் சிறுவயது முதலே நண்பர்கள். எம்.ஜி.ஆர் சிறுவயதாக இருக்கும்போது நாடகங்களில் நடித்து வந்தார். அப்போது அவரின் குடும்பம் வறுமையில் வாடியது. அப்போதெல்லாம் அவரின் வீட்டுக்கு சின்னப்ப தேவர் அரிசியை கொண்டு வந்து கொடுப்பாராம். அதனால்தான், எம்.ஜி.ஆர் பின்னாளில் பெரிய ஹீரோ ஆனபின் அவரின் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் மட்டும் 16 படங்களில் நடித்தார்.

மேலும், தேவர் பிலிம்ஸ் படங்களில் சிங்கம், புலி ஆகியவைகளும் முக்கிய காட்சிகளில் நடிக்கும். எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது விபூதியை அள்ளிக்கொண்டு போய் எம்.ஜி.ஆரின் நெற்றியில் பூசிவிட்டு ‘உனக்கு ஒன்னும் ஆகாது முருகா’ என சொன்னவர்தான் தேவர். தேவர் ஒரு தீவிர முருக பக்தர்.

இதையும் படிங்க: பத்மினியிடம் பளாரென அறை வாங்கிய சிவாஜி!.. எம்.ஜி.ஆர் அடித்த கமெண்ட்டுதான் ஹைலைட்

சில சமயம் எம்.ஜி.ஆருடன் சண்டையும் போடுவார் தேவர். எம்.ஜி.ஆருக்கு முன்பே பிரபல ஹீரோவாக இருந்த ரஞ்சன் எம்.ஜி.ஆரின் வரவுக்கு பின் ஹிந்தி சினிமா பக்கம் போய்விட்டார். மலைக்கள்ளன் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆங்கில படத்திற்கு இணையாக, அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு ஒரு ராபின் ஹூட் வகையான படத்தை எடுக்க வேண்டும் என தேவர் ஆசைப்பட்டார்.

MGR and Chinnappa Thevar

MGR and Chinnappa Thevar

அப்படித்தான் நீலமலைத் திருடன் படம் உருவானது. எம்.ஜி.ஆரை நடிக்க வைக்க ஆசைப்பட்டார் தேவர். ஆனால், நாடோடி மன்னன் பட வேலை காரணமாக சில மாதங்கள் காத்திருக்க சொன்ன எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் வளர்ந்துவிட்டதால் தனக்கு கால்ஷீட் கொடுக்க யோசிக்கிறார் என நினைத்த தேவர் பாலிவுட் பக்கம்போய்விட்ட ரஞ்சனை மீண்டும் அழைத்து வந்து நடிக்க வைத்தார்.

இதையும் படிங்க: எனக்கு ஒன்னும் தர மாட்டீங்களா?!.. எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய ஒரே பரிசு அதுதான்!..

ஒரு அட்டகாசமான ராபின் ஹுட் ஸ்டைலில் இந்த படம் உருவானது. இப்படத்தில் வழக்கம்போல் மிருகங்களும் நடித்திருந்தது. எம்.ஜி.ஆரை வைத்து என்னென்ன செய்ய வேண்டும் என தேவர் நினைத்தாரோ அது எல்லாவற்றையும் ரஞ்சனை வைத்து செய்தார். படமோ சூப்பர் ஹிட். படத்தின் துவக்க காட்சியில் குதிரையில் வரும் ரஞ்சன் பாடும் ‘சத்தியமே லட்சியமாய் கொள்ளடா’ பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

neelamalai

இதனால் தேவர் மீது எம்.ஜி.ஆருக்கு கோபமும் ஏற்பட்டது. ஆனாலும், அதன்பின் அவர்கள் இருவரும் மீண்டும் நண்பர்களாக மாறி பல வெற்றிப்படங்களை கொடுத்தனர்.

Next Story