அந்த டாக்டர் பட்டத்தை வாங்கிடாதீங்க!..கண்ணதாசனை எச்சரித்த சோ!.. இவ்வளவு நடந்திருக்கா!..
டாக்டர் பட்டம் 50,60 வரை மதிப்புமிக்கதாக இருந்தது. ஆனால், போகப்போக பல பல்கலைக்கழங்கங்கள் ஆதாயத்திற்காக தங்களுக்கு பிடித்த பலருக்கும் டாக்டர் பட்டங்களை வாரி வழங்கினார்கள். சிம்புவுக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுத்தார்கள் என்றால் அதன் மதிப்பு என்ன என்பதை நாமே புரிந்துகொள்ளலாம்.
சிம்புவுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது வேல்ஸ் இண்டர்நேசனல் பல்கலைக்கழகம்தான். இதன் நிறுவனர் யார் என பார்த்தால் சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். சிம்புவுக்கு ஐஸ் வைத்தால் தனக்கு கால்ஷீட் கொடுப்பார் என்றே அவர் அதை செய்தார் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்தவர் அவர்தான்.
இதையும் படிங்க: வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..
இந்த டாக்டர் படத்திற்கு பின்னால் பல மோசடிகளும் இருக்கிறது. 25 ஆயிரம் பணம் கொடுத்து டாக்டர் பட்டம் வாங்கியவர்கள் பலர் உண்டு. ஒரு பிரபலபத்தை அணுகி உங்களுக்கு எங்கள் பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் கொடுக்கிறோம் என சொல்வார்கள். ‘அட நமக்கு டாக்டர் பட்டமா’ என பிரபலங்கள் புளகாங்கிதம் அடைவார்கள்.
அதை வைத்து மற்றவர்களிடம் ‘நாங்கள் இவருக்கே டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறோம். 50 ஆயிரம் கொடுத்தால் உங்களுக்கு டாக்டர் பட்டம்’ என சிலர் பேரமும் பேசுவார்கள். அந்த லட்சணத்தில் இருக்கிறது இந்த டாக்டர் பட்டம். 60களில் பல திரைப்படங்களுக்கும் பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
இதையும் படிங்க: ஒரே மெட்டில் ரெண்டு கதைகளை சொன்ன கண்ணதாசன்.. எந்தப் படத்தில் தெரியுமா?..
அவரை ஒருநாள் ஒருவர் சந்தித்து ‘உங்களுக்கு நாங்கள் டாக்டர் பட்டம் கொடுக்க திட்டமிட்டிருக்கிறோம். விரைவில் அது தொடர்பான விழா நடக்கவுள்ளது ‘ என சொல்லிவிட்டு போனார். டாக்டர் பட்டம் வாங்க கண்ணதாசனுக்கும் ஆசைதான் என்றாலும் சோ விடம் இதுபற்றி கேட்போம் என சொல்லி தொலைப்பேசியில் அவரை தொடர்பு கொண்டார்.
சோ உடனே ‘அவன்தான் வந்தானா? என கேட்டு கண்ணதாசனிடம் வந்து பேசியவரின் பேரை சொல்லி இருக்கிறார். ‘ஆமாம் அவர்தான்’ என கண்ணதாசன் சொல்ல ‘அவன் ஒரு ஃபிராடு.. அப்படி ஒரு பல்கலைக்கழமே இல்லை. உங்களுக்கு பட்டம் கொடுத்துவிட்டு நாங்கள் கண்ணதாசனுக்கே டாக்டர் பட்டம் கொடுத்தவர்கள் என சொல்லி எல்லோரிடமும் காசு வாங்கி விடுவான். அந்த பட்டத்தை வாங்காதீர்கள்’ என சொல்லிவிட்டார். எனவே, அந்த பட்டத்தை வேண்டாம் என கண்ணதாசன் நிராகரித்துவிட்டார். இந்த தகவலை கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை ஊடகம் ஒன்றில் சொல்லி இருந்தார்.