நீ படிச்ச ஸ்கூலில நான் ஹெட்மாஸ்டருடா!... விஜயை அந்த ரேஸில் முந்திய பிரசாந்த்!..

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் விஜயின் சினிமா எண்ட்ரிக்கு முன்னால் கோலிவுட் கால் பதித்தவர் நடிகர் பிரசாந்த். அவரை யூகிக்கவே முடியாது. வெற்றிக்கு கட்டம் கட்டினால் கண்டிப்பாக அதை அடைந்தே தீரும் ஒரு ஆள் என்பது கோலிவுட் வட்டாரத்தில் பேச்சாக அடிபட்டு வருகிறது.

இன்றைய காலத்தில் வேண்டுமென்றால் விஜய் தான் முன்னணி நடிகர் எனக் கூறிக் கொள்ளலாம். ஆனால் ஒரு கட்டத்தில் பிரசாந்துக்கு இருந்த ரசிகர் கூட்டம் அதிகம். அந்த நேரத்தில் ஒரு மூன்று திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதில் ஒன்று மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால். பெரும்பாலும் மணிரத்னத்தின் திரைப்படங்கள் ஏ சென்டர் ஆடியன்ஸ்க்கு மட்டுமே பொருந்தும்.

பி மற்றும் சி சென்டர் ஆடியன்ஸை கவருவது கஷ்டம் தான். அடுத்து, விஜயின் தமிழன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படத்தில் தான் அவருக்கு முதல் முறையாக 4 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை மணிரத்னத்தின் அண்ணன் ஜி. வெங்கடேசன் தயாரித்திருந்தார். மஜீத் இயக்க எஸ் ஏ சந்திரசேகர் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருப்பார்.

அப்போதுதான் விஜய் வளர்ந்து வந்த சமயம் என்பதால் படம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதே நாளில்தான் பிரசாந்த் நடிப்பில் உருவான தமிழ் திரைப்படமும் திரைக்கு வந்தது. அப்படத்தில் தான் இயக்குனர் ஹரி அறிமுகமானார். 2000-களில் தொடக்கம் என்பதால் திருட்டு விசிடிகள் புழக்கம் அதிகம். கேபிள் டிவியில் கூட புதிய படங்கள் திரையிடப்படும் காலம் அது.

அப்படி ஒருமுறை, பிரசாந்த் நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. வித்தியாசமான வில்லனாக நாசரும், ஆக்சன் நாயகனாக பிரசாந்தின் நடிப்பும் பெரிய அளவில் கவரப்பட ரசிகர்கள் இந்த படம் நல்லா இருக்கே என பேச தொடங்குகின்றனர். டிஜிட்டல் காலம் இல்லாததால் மக்களின் பேச்சுகளை அதிகமாக தமிழ் படத்திற்கு கூட்டம் திரையரங்குகளில் கூடியது.

இதனால் அடுத்த சில வார நல்ல வரவேற்பை பெற்றிருந்த தமிழன் திரைப்படத்தை ஓரம் கட்டி தமிழ் பெரிய அளவில் வசூல் குவித்தது குறிப்பிடத்தக்கது. பிரசாந்தின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால் தான் அவர் ஓரம் கட்டினார். இல்லையென்றால் இன்று விஜயை விட பெரிய இடத்தில் பிரசாந்த் தான் இருந்திருப்பார் எனவும் திரை வட்டாரத்தில் பேச்சுக்கள் தொடர்ச்சியாக கசிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story