நடிகர்களுக்கே ஒன்னும் செய்யல!.. அரசியல் கஷ்டம்!.. விஜயை விளாசிய காமெடி நடிகர்!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:32:42  )

Vijay Tvk: நடிகர் விஜய் பல வருடங்களாக தனது ரசிகர்களை ஒருங்கிணைத்து அதை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினர். அதன்பின் விஜய் ரசிகர்கள் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தங்களால் முடிந்த பொது சேவைகளில் ஈடுபட்டு வந்தனர். ஒருபக்கம், கடந்த சில வருடங்களாகவே விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் வரவழைத்து அரசியல் தொடர்பாக விவாதித்து வந்தார்.

எனவே, விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் அவரின் ரசிகர்கள் பலரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இது அவருக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது.

இந்நிலையில்தான், தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சியினர் போட்டியிடுவார்கள் என அறிவித்தார் விஜய். அதைத்தொடர்ந்து கடந்த 27ம் தேதியான நேற்று விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி பகுதியில் கட்சியின் முதல் மாநாடு நடந்தது.

இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர். 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8லிருந்து 10 லட்சம் பேர் வரை கலந்து கொண்டார்கள் என சொல்லப்படுகிறது. இந்த மாநாட்டில் பேசிய விஜய் ஆக்ரோஷமாக பல விஷயங்களை பேசினார்.

இதற்கு முன் விஜய் இப்படி பேசி யாரும் பார்த்தது இல்லை. தேசியம், திராவிடம், பிளபடுத்தும் அரசியல், ஊழல் என பல விஷயங்களை பேசினார். ஊழலை எதிர்த்து போராடுவேன் எனவும், 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றாலும் கூட்டணி அமைத்து அவர்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்பேன் எனவும் கூறினார்.

விஜயின் அரசியல் எண்ட்ரிக்கு திரையுலகில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஒருபக்கம் விமர்சனமும் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மறைந்த நடிகர் விவேக்குடன் பல படங்களில் நடித்துள்ள காமெடி நடிகர் கிளி ராமச்சந்திரன் ‘விஜய் சார் அரசியலில் நீடிக்க முடியாது. ஏனெனில் அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறார். அதேநேரம், தன்னுடன் நடித்த நடிகர்களுக்கு செய்ய எந்த நடிகரும் முன்வருவதில்லை. முதலில் உங்களுடன் நடிக்கும் நடிகர்களுக்கு உதவுங்கள்.. அதன்பின் மக்களுக்கு உதவுங்கள்’ என பேசியிருக்கிறார்.

Next Story