நைட் ஃபுல்லா அஜீத்துக்கு வந்த டார்ச்சர்...! ரஜினி நடத்திய சமரசம்... களைகட்டுமா விஜய் மாநாடு
விஜய் மாநாட்டில் வைக்கப்பட்ட கட் அவுட்கள் குறித்தும், ரஜினி, அஜீத்தின் வாழ்த்துகளைப் பற்றியும் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...
விஜய் அம்பேத்கார், பெரியார், காமராஜர் என 3 கட்அவுட்களை வைத்துள்ளார். அதுல அண்ணா இல்லை என்பது ஒரு மிகப்பெரிய குறையாகப் பேசப்படுகிறது. அண்ணாவைக் கொண்டு வந்தால் இன்னொரு திமுக அல்லது அதிமுகவா அது மாறியிருக்கும். ஆனா அண்ணாவைத் தவிர்த்து அரசியல் உண்டான்னா பெரும்பாலும் இல்லை. தமிழ்நாடு என்ற பெயர் வருவதற்கே அண்ணா தான் காரணமா இருந்துருக்காரு.
எல்லாத்தையும் தாண்டி மிகப்பெரிய பேரறிஞர் அவர். ஆனா வெறும் கட் அவுட் எந்த வேலையையும் செய்யாது. அவர் வழியைப் பின்பற்றுறோம்னு வைக்கிறாங்க. ஆனா அது முடியுமா முடியாதான்னு இன்றைக்குப் பல கட்சிகள் காமிச்சிக்கிட்டே இருக்காங்க. அவரோட கொள்கைகளை நாங்க செயல்படுத்துறோம்னு இன்னிக்கு எந்தக் கட்சிகளும் சொன்னது கிடையாது.
விஜய் கட்சி ஆரம்பித்ததும் அவர் பிஜேபியோட பி டீம்னு சொன்னாங்க. பெரியாரைக் கொண்டு வந்ததும் அவங்க பேச மாட்டாங்க. அண்ணாவைக் கொண்டு வந்தால் திமுக, அதிமுக மாதிரியான்னு குழப்பம் வரக்கூடாதுன்னு தான் வச்சிருக்க மாட்டாரு. கடவுள் மறுப்பு கொள்கையில இருந்தா கூட வீட்டுல இன்னைக்கும் சாமி கும்பிட்டுக்கிட்டுத் தானே இருக்காங்க. கட் அவுட் இருக்குன்னா அந்த அளவுல மட்டும் பாருங்க.
அஞ்சலையம்மாள் விக்கிரவாண்டி பக்கத்தில் உள்ள கடலூரைச் சேர்ந்தவர். சுதந்திரப் போராட்ட தியாகி. பெரியாரோடு இணைந்து பணியாற்றினாங்க. அந்த மாதிரி தியாகத் தலைவிகளைக் கொண்டு வந்து வைக்கிறது பெரிய விஷயம். வேலு நாச்சியாரும் அப்படித்தான். இன்னைக்கு நாட்டுல என்ன குறை இருக்கு. நான் எதை சரி பண்ணப் போறேன் என்பதை சொல்ல வேண்டும்.
ஆளும் கட்சியை அவர் சொல்லியே ஆகணும். அதே நேரத்தில் மிக நேர்த்தியாக அதை சொல்வார் விஜய். மேடை சுவாரசியத்துக்காக அநாகரிகமாகப் பேசக்கூடாது. பிற கட்சிகளைத் தாழ்த்திப் பேசக்கூடாதுன்னு விஜய் வலியுறுத்தி இருக்கிறார். காவல்துறை இறங்கி இந்த மாநாட்டை எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நடத்தணும்னு அக்கறையோடு இருக்காங்க.
அதனால் தான் ரூட் மேப்பை ரொம்ப அழகா போட்டுருக்காங்க. அப்படிப் பார்க்கும்போது மாநாட்டுக்கு ஆளும் கட்சி தலையீடு பெரிசாக இல்லை. குற்றம் என்பது விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் சமூக விரோத செயலில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கு. ஆனா மாவட்டத்தின் சார்பாக வரும் தொண்டர்கள் அதை சரியாகக் கவனித்துக் கொள்வார்கள். அதனால் அப்படி ஒரு அசம்பாவிதம் நடக்க வாய்ப்பில்லை. மாநாட்டுக்கான முன்னேற்பாடுப் பணிகளைப் பார்க்கும்போது ரொம்ப அழகா பண்றாங்க. அஜீத்திடம் இருந்து ஒரு வாழ்த்துக் கடிதம் பெற்று வாசிப்பதற்கான முயற்சிகள் நடக்கு.
கலைஞர் மேடையில இருக்கும் போது அஜீத் பேசினது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. அதுக்கு அப்புறம் ஒரு நாள் முழுக்க அஜீத்தைத் தூங்க விடாமல் திமுகவினர் டார்ச்சர் பண்ணினாங்களாம். அதுக்கு அப்புறம் ரஜினி காலையில கலைஞரைப் பார்க்க வச்சிப் பேசி அந்தப் பிரச்சனையை சரி செய்தார். அதனால அஜீத் வாழ்த்து சொல்ல வாய்ப்பு இருக்கு.
ரஜினி ஏர்போர்ட்ல வச்சி வெளிப்படையா வாழ்த்துக்கள் சொல்லிட்டாரு. ஆனா மனப்பூர்வமா சொல்லல. ரஜினி வாழ்த்து சொல்ல வாய்ப்பு இல்லை. ஏன்னா அவர் திமுகவுக்கு ரொம்ப நெருக்கமா இருக்காரு. ஆனா அஜீத் மனசுல பட்டதை வெளிப்படையா சொல்றவரு. அதனால அவர் சொல்றதுக்கு வாய்ப்பு இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.