பிளடி பெக்கரா மாறிய நெல்சன்! பாவம் ஏமாந்துட்டாரு.. சாய்ச்சுப்புட்டாங்கப்பா

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:54  )

செலக்ட்டிவான கதைகளை தேர்ந்தெடுத்து மக்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்திருப்பவர் நடிகர் கவின். இவரது நடிப்பில் தீபாவளி ரிலீஸாக நேற்று வெளியான திரைப்படம் பிளடி பெக்கர். இந்தப் படத்தை நெல்சன் தயாரித்திருந்தார். இதன் மூலம் ஒரு தயாரிப்பாளராக களம் இறங்கியிருக்கிறார் நெல்சன். இதுவரை இயக்குனராக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நெல்சன்.

பிளடி பெக்கர் படம் இவருக்கு ஒரு தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தை கொடுத்ததா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். நேற்று வெளியான மூன்று திரைப்படங்களில் பிளடி பெக்கர் திரைப்படம் தான் அதிக எதிர்மறையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரையும் கவர்ந்த நிலையில் படம் பார்க்க போனவர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டிரெய்லரை காட்டி ஏமாத்திட்டாங்க. ஏன் நெல்சனையும் சேர்த்துதான் ஏமாத்திப்புட்டாங்க என்றெல்லாம் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். டார்க் காமெடி என்ற பெயரில் நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும் படியாக இல்லை என்றும் ரெடின் கிங்ஸ்லி வரும் ஒரு சில காட்சிகள் தான் ரசிகர்களை கவர்ந்தது என்றும் கூறி வருகிறார்கள்.

படம் பார்த்துவிட்டு நாங்கள்தான் இப்போது பெக்கரா வந்து நிக்கிறோம் என்றெல்லாம் கடுமையான விமர்சனத்தை ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மிக பொறுமையாக வெளியாகி இரண்டு மூன்று வாரங்கள் மெதுவாக ஓடும் படம் பிளடி பெக்கர். இதை கொண்டு வந்து ஏன் தீபாவளி ரேஸில் இறக்குனாங்கனு தெரியல என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படம் முழுக்க கவினை ஒரு பெக்கராக காட்டியிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். அவரை ஒரு அரண்மனைக்குள் விட்டு பாவம். படாத பாடு படுத்தியிருக்காங்க என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். யானைப்பசிக்கு சோளப் பொறி என்பது போல படம் சுமாராகத்தான் இருக்கிறது. காசு வேஸ்ட் என்றெல்லாம் பல பேர் கூறி வருகிறார்கள்.

இருந்தாலும் நடிப்பு என்று பார்க்கும் போது கவினை பாராட்டத்தான் வேண்டும். செலக்ட்டிவான சப்ஜெக்ட்களை தேர்ந்தெடுத்து எதார்த்தமான நடிப்பை கொடுத்து மக்களை கவர்ந்து வரும் கவின் இந்தப் படத்தை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

Next Story