இன்கிரிடிபிள் இளையராஜான்னு சொல்லுங்க... பாரதியார், கண்ணதாசன் காலத்துலயே இது இருக்கு!

இளையராஜா தற்பெருமைக்காரர். கர்வம் பிடித்தவர். பேட்டியில் எரிந்து விழுகிறார். ரொம்ப கோபப்படுகிறார்னு எல்லாம் செய்திகளைப் போடுறாங்க. இதுக்கு நெத்தியடியாய் பதில் சொல்கிறார் திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி. வாங்க என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
இசைஞானி இளையராஜா நாளை (8.3.2025) லண்டன் அப்போலோ அரங்கில் அவரது சிம்பொனி இசையை அரங்கேற்ற உள்ளார். ரொம்பவும் மகிழ்ச்சியோடு கிளம்புகிறார். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவின் வீட்டிற்கே நேரில் சென்று வாழ்த்தினார். தொடர்ந்து கமல், சிவகார்த்திகேயன், திருமாவளவன் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
கூடுதலா உணருவேன்: இளையராஜாவிடம் நிருபர்கள் பல கேள்விகள் கேட்டனர். அவர்களில் ஒருவர் நீங்க தமிழனா என்ன உணருறீங்கன்னு கேட்டாரு. அதற்குப் பதில் சொன்ன இளையராஜா ஒரு மனுஷனா என்ன உணர்றேன்னாரு. இன்னொருத்தர் நீங்க இந்த இசையை அமைச்சிருக்கீங்கள்ல. அதை எப்படி உணருறீங்கன்னாரு. உனக்கு என்னமாதிரி சந்தோஷமா உணருறே? அப்படின்னா அதை விட கூடுதலா உணருவேன்லன்னு சொல்றாரு இசைஞானி.
இளையராஜா கோபத்தில் பேசுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர் ஒருமையில் பேசுவது அது ஒருவித அன்பு. ராஜா சாரை விட பல ரசிகர்களும் சின்ன வயதினர்தான். அந்த வகையில் ரொம்ப மகிழ்ச்சியோடுதான் பேசுறாங்க. அப்போது ஒரு நிருபர் 'இது இந்தியாவுக்கே பெருமை'ன்னு சொல்றாரு.
இன்கிரிடிபிள் இளையராஜா: அதுக்கு இளையராஜா 'இன்கிரிடிபிள் இந்தியா'ங்கற மாதிரி 'இன்கிரிடிபிள் இளையராஜா'ன்னு வச்சுக்கோயேன்னு சொல்றாரு. அதுகூட நல்லாத்தான் இருக்கு. இந்த மாதிரி ஒரு ஆளு வந்ததும் இல்ல. இனி வரப்போவதும் இல்ல. அதனால நாமதான் அவரைப் பற்றி பெருமையா பேசணும். அவரு என்ன தற்பெருமையா பேசுறது? நாம் அல்லவா அவரைப் பற்றிப் பேசணும்னு நிருபர் ஒருவர் சொல்கிறார்.
அனாவசியமான கேள்வி: இன்னொரு நிருபர்தான் கோபம் வருகிற மாதிரி கேள்வி கேட்கிறார். தேவா காப்பிரைட் வேணாம்னு சொல்லிருக்காரேன்னு கேட்குறாரு. அப்போதான் இளையராஜாவுக்கு கோபம் வருது. இப்ப எதுக்காக வந்தே? நீ என்ன கேள்வி கேட்குற? அனாவசியமான கேள்வி எல்லாம் கேட்காதே...ன்னு சொல்லிடுறாரு.
சிம்பொனி குறித்து ஏதாவது கேட்டுருக்கலாம். அதை விட்டுட்டு தேவா சாரைப் பற்றிக் கேட்கறதுக்கு என்ன இருக்கு? பாரதியாருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்குமே ஞானச்செருக்கு இருந்துருக்கு. அவருடைய பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.
காதலி திட்டுனா சந்தோஷம்: அதே போலத்தான் இளையராஜா தற்பெருமை பேசுவதையும் ஞானச்செருக்காகவே கொள்ளலாம். அவரிடம் ஏதாவது கேட்பதாக இருந்தால் யோசித்துவிட்டுத் தான் கேட்கணும். அவரு திட்டுனாலும் சந்தோஷமா இருக்கும். காதலி திட்டுனா சந்தோஷம். அதுமாதிரி தான் இதுவும் என்கிறார் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி.