தங்கலான் விழாவில் சியான் இப்படி செய்யலாமா?!... பாலா இல்லாம விக்ரம் வந்துட்டாரா?..
சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு போராடி மேலே வந்தவர் விக்ரம். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போதே ஆங்கில நாடகங்களில் நடிப்பார். அப்போது அவரின் நடிப்பை எல்லோரும் பாராட்ட நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. சினிமா உலகில் பலமுயற்சிகள் செய்தும் பெரிய இயக்குனர்களின் பார்வை விக்ரம் மேல் படவில்லை.
பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் விக்ரமை வைத்து ஒரு படத்தை எடுத்தார். அந்த படமும் ஓடவில்லை. மீரா என்கிற படத்தில் நடித்தார். அந்த படத்தின் பாடல்கள் மட்டும் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், விக்ரமுக்கு ஹிட் கிடைக்கவில்லை. எனவே, அப்பாஸ், வினித், பிரபுதேவா போன்ற நடிகர்களுக்கு டப்பிங் குரல் கொடுக்க துவங்கினார்.
ஒருபக்கம், மலையாள படங்களில் ஹீரோக்களின் தம்பியாக பல படங்களிலும் நடித்தார். அப்போதுதான் இயக்குனர் பாலாவின் அறிமுகம் கிடைத்தது. ஏற்கனவே, முரளி, விக்னேஷ் என பலரிடம் சென்று அவர்கள் நடிக்காமல் போன கதையான சேது படத்தில் நடிக்கும் வாய்ப்பு விக்ரமுக்கு கிடைத்தது.
இந்த படத்தில் விக்ரமரை சிறப்பாக நடிக்க வைத்தார் பாலா. இந்த படத்திலிருந்து சியான் விக்ரமாக மாறினார் விக்ரம். அதன்பின் தில் தூள், ஜெமினி, சாமி என ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார் விக்ரம். மீண்டும் பாலாவின் இயக்கத்தில் பிதாமகன் படத்திலும் நடித்தார். இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
அதன்பின் விக்ரம் பாலாவின் இயக்கத்தில் நடிக்கவிலை. அதோடு, விக்ரமின் மகன் துருவை வைத்து பாலா இயக்கிய வர்மா படத்தை கிடப்பில் போட்டுவிட்டு வேறு இயக்குனரை வைத்து மீண்டும் எடுத்தார் விக்ரம். இது பாலாவுக்கு அவமானமாகிப் போனது. அதன்பின் விக்ரம், பாலாவுக்கும் இடையே உறவே இல்லாமல் போய்விட்டது.
இந்நிலையில், ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து விரைவில் வெளியாகவுள்ள தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய விக்ரம் தன்னை வளர்த்துவிட்ட இயக்குனர்கள் பெயரை சொல்லும்போது அவர் பாலாவை சொல்லவில்லை.
இதையடுத்து, விக்ரமுக்கு சியான் என்கிற பெயர் வர காரணமே பாலாதான். விக்ரம் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சேது, பிதாமகன் ஆகிய படங்கள்தான். அப்படி இருக்கும்போது விக்ரம் பாலாவின் பெயரை சொல்லாமல் விட்டது குரு துரோகம் என சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.