ஜீவாவுக்கு போகும் பல கோடி சொத்து!. அதனாலதான் இப்படி ஆடுறாரா?!....

by ராம் சுதன் |

90களில் தமிழ் சினிமாவில் திரைப்படங்களை தயாரிக்க துவங்கியவர் ஆர்.பி.சவுத்ரி. விக்ரமன் முதல் பல புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்தவர் இவர். வித்தியாசமான காதல் கதையை வைத்திருக்கும் உதவி இயக்குனர்கள் எல்லாமே அப்போது கதை சொல்ல சூப்பர் ஹிட் பிலிம்ஸ் நிறுவனத்திற்குதான் செல்வார்கள்.

விக்ரமன் இயக்கிய பல படங்களை தயாரித்தவர் இவர்தான். நடிகர் விஜய்க்கு முக்கிய திருப்பமாக அமைந்த பூவே உனக்காக படத்தை தயாரித்தவரும் இவர்தான். இவரின் தயாரிப்பில் பல நடிகர்களும் ஆசைப்படுவார்கள். ஆனால், கார்ப்பரேட் கம்பெனிகள் சினிமாவில் நுழைந்தபின் சூப்பர் ஹிட் பிலிம்ஸ் நிறுவனம் சினிமா தயாரிப்பை நிறுத்தியது.

இதுவரை 99 படங்களை தயாரித்துள்ள அந்த நிறுவனம் தனது 100வது தயாரிப்பில் விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறது. இதற்காக விஜயிடம் கால்ஷீட் கேட்டு கடந்த சில வருடங்களாக அலைந்து வருகிறார் ஆர்.பி.சவுத்ரி. ஆனால், விஜயிடமிருந்து க்ரீன் சிக்னல் செல்லவில்லை.

ஆர்.பி.சவுத்ரியின் மகன்தான் நடிகர் ஜீவா. ராம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர். ஈ, சிவா மனசுல சக்தி, கோ ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்தவர். ஆனால், கடந்த சில வருடங்களாகவே அவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் ஓடுவதில்லை. அவரும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை.

இந்நிலையில்தான், ஜீவாவை வைத்து ‘சிவா மனசுல சக்தி’ எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ராஜேஷ் சிவா மனசுல சக்தி 2 எடுக்க ஆசைப்பட்டு ஒரு தயாரிப்பாளரை உஷார் செய்து ஜீவாவிடம் அழைத்து போயிருக்கிறார். அப்போது நாலரை கோடியை சம்பளமாக கேட்டிருக்கிறார் ஜீவா. அதிர்ச்சியடைந்த இருவரும் ‘அப்புறம் பார்ப்போம் புரோ’ என சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள்.

சுந்தர் சி இயக்கியுள்ள கலகலப்பு 3 படத்தில் நடிக்க கேட்டபோது 4 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார் ஜீவா. எனவேதான், விமல் மற்றும் மிர்ச்சி சிவாவை வைத்து படத்தை இயக்கி வருகிறார் சுந்தர் சி. சூப்பர் ஹிட் பிலிம்ஸ் நிறுவனம் விரைவில் ஜீவாவின் கைக்கு வரப்போகிறதாம். எனவேதான், ஜீவா இப்படி சம்பளம் கேட்கிறார் என்கிறது திரையுலகம்.

Next Story