ஒருவழியா சொல்லிட்டாங்கப்பா!. கங்குவா ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது தெரியுமா?...

by ராம் சுதன் |

Kanguva: சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. அதன்பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்கிற படத்தில் நடிக்க துவங்கினார். மஹதீரா, பாகுபலி போல சரித்திர பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

எனவே, வித்தியாசமான தோற்றத்தில் சூர்யா நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு இரட்டை வேடம் என சொல்லப்படுகிறது. ஏழாம் அறிவு படத்தில் போதி தர்மர் வேடத்தில் நடித்த சூர்யா கங்குவா படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள் கிராபிக்ஸ் பணியை செய்திருக்கிறார்கள்.

இப்படத்தை சூர்யாவின் உறவினர் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா அதிக செல்வி எடுத்து வருகிறார். இந்த படத்தில் திஷா பத்தானி, பாபி தியோல், யோகிபாபு, ரெட்டிங் கிங்ஸ்லி, கோவை சரளா என பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஸ்ரீதேவி பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் பல நாட்கள் நடந்தது. படக்குழு மிகவும் கஷ்டப்பட்டு பல நாட்கள் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறது. ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு ஆக்சன் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, கங்குவா படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கங்குவா திரைப்படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படம் பல மொழிகளிலும் உருவாகி வருகிறது. சூர்யா ரசிகர்களுக்கு இப்படம் கண்டிப்பாக ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என நம்பப்படுகிறது. இப்படம் தொடார்பான அப்டேட்டுகள் அதிகமாக வெளியாகவில்லை.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அதாவது முதல் பாடல் நாளை வெளியாவதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இது சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

Next Story