Vijay TVK: புதிய பெயருடன் TVK.. இதெல்லாம் தேவையா? போஸ்டர் போட்டு அசிங்கப்படுத்திட்டாங்களே

Published on: December 5, 2025
---Advertisement---

Vijay TVK:

சினிமாவில் உச்சம் தொட்டு அடுத்து அரசியலிலும் சாதிக்கவேண்டும் என்ற முனைப்போடு வந்தார் விஜய். ஆரம்பத்தில் மாணவ மாணவியர்களுக்கு தேவையான ஊக்கத்தொகை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவி , கிராமங்களில் ஆங்காங்கே இருக்கும் மக்களுக்கு தன் தொண்டர்கள் மூலமாக உதவி என அரசியலுக்கு தேவையான யுத்திகளை கையாண்டார்.

கடந்தாண்டுதான் தன்னுடைய கட்சி பெயரையும் கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தி தனது அரசியல் வருகையை பதிவு செய்தார். 2026 சட்டமன்ற தேர்தலை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என தனது தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் அறிவுரை வழங்கினார். அவர் நடித்துக் கொண்டிருந்த ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் முழு நேர அரசியல்வாதியாகவே மாறினார் விஜய்.

வெற்றிகரமாக நடத்தப்பட்ட மாநாடு:

படப்பிடிப்பை முடித்த கையோடு பனையூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் நிர்வாகிகளை அழைத்து அவ்வப்போது ஆலோசனை கூட்டம் நடத்தினார். விக்கிரவாண்டியில் பெரிய அளவில் தன்னுடைய முதல் மாநாட்டை நடத்தி மற்ற அரசியல் கட்சிகளுக்கு பயத்தை காட்டினார். அந்த மாநாட்டுக்கு லட்சக்கணக்கான பேர் கூடியிருந்தனர். அதனை தொடர்ந்து இரண்டாவது மாநாட்டை மதுரையில் நடத்தினார்.

அந்த மாநாடும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இரண்டு மாநாட்டையும் நடத்திய பிறகு தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பேன் என திருச்சியில் தன்னுடைய முதல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் விஜய். அதனை தொடர்ந்து கடலூர், நாமக்கல், கரூர் என ஒவ்வொரு மாவட்டங்களுக்காக சென்று தொண்டர்களையும் ரசிகர்களையும் சந்தித்து 2026ல் உறுதியாக ஆட்சியை அமைப்போம் என்று பேசி வந்தார் விஜய்.

எதிர்பாராத சம்பவம்:

இதில் எதிர்பாராத விதமாக கரூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பல பேர் காயமடைந்தனர். இந்த நிகழ்வுக்கு பிறகு விஜய் வெளியே வரவே இல்லை. அவருடைய கட்சி நிர்வாகிகளான ஆதவ் அர்ஜூனா, பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் என யாருமே வெளியே தலைகாட்டவில்லை. மூன்று நாள்களுக்கு பிறகு விஜய் பேசிய ஒரு வீடியோதான் வெளியானது.

Vijay TVK: புதிய பெயருடன் TVK.. இதெல்லாம் தேவையா? போஸ்டர் போட்டு அசிங்கப்படுத்திட்டாங்களே

ஆனாலும் கரூருக்கு சென்று மக்களை சந்திக்க வேண்டும் என மனு ஒன்றை தவெக கட்சி சார்பாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தவெக என்பது தமிழக வெற்றிக்கழகம் என அனைவருக்குமே தெரியும். கரூர் சம்பவத்துக்கு பிறகு அதை ‘தலைமறைவு வாழ்க்கைக் கழகம்’ என மாற்றி போஸ்டர் ஒட்டி சோசியல் மீடியாக்களில் மொத்தமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் பதிவு:

இதை டேக் செய்து ப்ளூ சட்டை மாறனும் அவருடைய பதிவில் ‘சம்பவம் நடந்த அன்று கரூரிலோ அல்லது திருச்சியிலோ விஜய் தங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லியிருக்கலாம். எங்களுக்கு அனுமதி தரவில்லை என்பதையும் அங்கிருந்தே ஊடகங்களில் தெளிவுப்படுத்தியிருக்கலாம். இல்ல, சென்னை வந்ததும் வீடியோ காலிலாவது பேசியிருக்கலாம், அவங்க செய்த தாமதம், அதற்கான விலையை தந்துக் கொண்டிருக்கிறது’ என பதிவிட்டிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment