கூலி படத்தின் ரிசல்ட், அந்த படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்கள், இது எல்லாமே லோகேஷ் கனகராஜை அப்செட்டாக்கி இருக்கிறது. சினிமாவில் யாரை திடீரென உயர்த்தி பிடிப்பார்கள்? யாரை தூக்கி கீழே போடுவார்கள்? என கணிக்கவே முடியாது. ஓவர் நைட்டில் ஒருவர் பிரபலம் ஆகி விடுவார். ஒரு படம் தோல்வியாக கொடுத்தால் தூக்கி கீழே போட்டு விடுவார்கள். மீண்டும் எழுவது கடினம்.
மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ ஆகிய படங்களை இயக்கி இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக மாறியவர் லோகேஷ். அவர் இயக்கிய லியோ படமே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. அடுத்து ரஜினியை வைத்து இயக்கிய கூலி படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அந்த படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கவில்லை. எனவே அந்த படம் எதிர்பார்த்த வசூலையும் பெறவில்லை. இது லோகேஷே எதிர்பார்க்கவில்லை.
ஆனாலும் ரஜினி, கமல் இருவரையும் வைத்து இயக்கும் படம் அவரின் கையில் தற்போது இருக்கிறது. இந்த படத்திற்கு கதை எழுதுவதற்காக ஒரு அமைதியான இடத்திற்கு செல்ல முடிவெடுத்த லோகேஷ் தாய்லாந்தில் உள்ள புக்கெட் தீவுக்கு சென்று இருக்கிறார்.
இதில்தான் ஒரு டுவிஸ்ட். லோகேஷுக்கு அந்த இடத்தை பரிந்துரி செய்ததே சிம்புதான் என்கிறார்கள். ஏனெனில் சிம்புவும் தற்போது புக்கெட் தீவில்தான் இருக்கிறார். ‘இந்த இடம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.. மிகவும் அமைதியானது.. நீங்கள் கதையை எழுத இது சரியான இடம்.. வாருங்கள்’ என சொல்லி இருக்கிறார். எனவே அங்கு இருவரும் தினமும் சந்தித்துக் கொள்கிறார்களாம். ஜிம்முக்கு கூட இவரும் ஒன்றாக போகிறார்களாம். நடப்பதை பார்க்கும்போது எதிர்காலத்தில் சிம்புவும் லோகேஷும் இணைந்து படம் பண்ணவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
