TVK கொள்கை விளக்கப் பாடலுக்கு இசை அமைக்க சான்ஸ் கிடைச்சது எப்படி? அப்படியா சொன்னாரு தளபதி?
விஜய் அரசியலில் இறங்கியதும் அவரது முதல் மாநில மாநாட்டை அனைவரும் எதிர்பார்த்தனர். பூச்சாண்டி காட்டுற வேலை இல்லை. இது இறங்கி அடிக்கிறதுன்னு நிரூபித்துள்ளார் தளபதி விஜய். அரசியல்னு வந்துட்டா எடுத்த முடிவுல இருந்து பின்வாங்கப் போறதில்லை.
ஒரு முடிவோடத் தான் வந்துருக்கேன். அப்படின்னும் இந்த அவர்களே, இவர்களே எல்லாம் எதுக்கு? நான் பாம்பைக் கையில பிடிச்சிருக்குற குழந்தை மாதிரி. எனக்குப் பயம்னா என்னன்னு தெரியாது.
அதனால இப்போ நான் அந்த அரசியல்ங்கற பாம்பைக் கையில புடிச்சிட்டேன். இனி விடப்போறதில்லை என்கிற மாதிரி துணிச்சலுடன் பேசி அவரது லட்சக்கணக்கான தொண்டர்களை ஆர்ப்பரிக்க வைத்தார்.
அவரது பேச்சைக் கேட்டுப் பலரும் வியந்தனர். வலைப்பேச்சு அந்தனனோ இது சர்கார்; 2 மாதிரி இருக்கு. இப்படி பேசுவாருன்னு நினைச்சிக் கூட பார்க்கலை என்று வியந்துள்ளார். அவரது அரசியல் எதிரி யாருன்னு தெளிவாகச் சொல்லிவிட்டார். இனி தான் அவரை இனி தான் குறி வைப்பாங்கன்னு கூடவே பூச்சாண்டியும் காட்டி விட்டார்.
எல்லாம் சரி. அந்த வெற்றி வெற்றி என்ற கொள்கை முழக்கப்பாடல் படு மாஸாக இருந்ததே. அதுவும் ஒன்ஸ்மோர் எல்லாம் போட்டாங்களே. அதுக்கு இசை அமைப்பாளர் யார் என்று பலரது மனதிலும் கேள்வி எழுந்து இருக்கலாம். அதற்கு அந்த இசை அமைப்பாளரே அந்தப் பாடலுக்கு எப்படி கமிட் ஆனேன்னு பேட்டி கொடுத்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
'த.வெ.க.வின் சித்தாந்த பாடலை இசை அமைக்க என்னை தேர்ந்தெடுத்தது ஏன்?'னு விஜய் சார்கிட்ட கேட்டேன். 'உன்னால மட்டும் தான் முடியும்'னு சொன்னார்.
'என்ன நம்புனதுக்கு நன்றி விஜய் சார். உங்க குரலை பதிவு செய்றது என் வாழ்க்கையோட மிகப்பெரிய கனவாக இருக்கும். உங்க அரசியல் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்' என்று தெருக்குரல் அறிவு நெகிழ்ச்சியுடன் பதிவை வெளியிட்டுள்ளார்.