யுவன்தான் ஏமாத்திட்டான்! நீங்க எப்படி? வெங்கட் பிரபுவுக்கு போடப்பட்ட கண்டிஷன்!.. என்ன செய்யப் போறாரு?
விஜய் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியாகும் என்ற ஒரு தகவல் இணையத்தில் வைரலானது. ஆனால் இப்போது வந்த தகவலின் படி டிரெய்லர் வெளியீட்டு தேதியில் மாற்றம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதாவது கோட் படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. இது கூட இப்போது பரிசீலனையில்தான் இருக்கிறதாம். மேலும் கோட் படத்தால் யுவன் மிகவும் பாதிக்கப்பட்டார். வெளியான மூன்று சிங்கிள்களும் ரசிகர்களின் மனதை திருப்திபடுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் ரீ ரிக்கார்டிங்கில் யுவன் பட்டைய கிளப்பியிருக்கிறாராம். அது வேற லெவலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கோட் படத்தின் தயாரிப்பு தரப்பில் இருந்து வெங்கட் பிரபுவுக்கு ஒரு கண்டீசனை போட்டிருக்கிறார்களாம்.
கோட் படத்தின் பாடல்களால் படம் இப்போது வரை விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றது. அதனால் இந்த நெகட்டிவை பாசிட்டிவாக மாற்ற வேண்டிய கடமை வெங்கட் பிரபுவிடம் இருப்பதாக தயாரிப்பு தரப்பில் இருந்து கூறியிருக்கிறார்களாம்.
அதற்கு வெங்கட் பிரபு டிரெய்லரை பெரிய அளவில் உருவாக்க வேண்டுமாம். படத்தில் இருக்கும் சிறப்பான அம்சங்கள் எல்லாம் டிரெய்லரில் காட்ட வேண்டுமாம். டிரெய்லரை பார்த்து ரசிகர்கள் பிரமிக்க வேண்டுமாம். சிங்கிள்களால் வந்த விமர்சனத்திற்கு டிரெய்லர் மூலம்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வெங்கட் பிரபுவுக்கு கண்டீசனை போட்டிருக்கிறார்களாம்.
அதனால் ஒரு டிரெய்லருக்காக வெங்கட் பிரபு மிகவும் மெனக்கிட வேண்டியிருக்கும் .மேலும் இந்த டிரெய்லர் ரெடியாகும் பட்சத்தில்தான் ஆகஸ்ட் 15 ஆம் தேதி டிரெய்லர் வெளியாகும். இல்லாவிடில் சொன்ன தேதியான ஆகஸ்ட் 19 ஆம் தேதிதான் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகிறது.