குக் வித் கோமாளி சீசன் 5 விரைவில் விஜய் டிவியில் தொடங்க உள்ள நிலையில், கோமாளிகளாக யாரெல்லாம் கலந்து கொள்ள போகின்றனர் என்கிற அதிரடி அறிவிப்பு புதிய புரோமோவாக வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகிய நிலையில், செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவர்களாக செயல்பட உள்ளனர். இந்த முறையும் சூப்பரான போட்டியாளர்களையும் பிக் பாஸ் வீட்டில் வந்து விட்டு வெளியே வாய்ப்பே கிடைக்காத விஜய் டிவி புராடக்ட்களையும் போட்டியாளராக உள்ளே கொண்டு வருவார்கள்.
இதையும் படிங்க: கனவு நனவாகிடுச்சு!.. என் குருநாதருக்கே டான்ஸ் சொல்லிக் கொடுத்துட்டேன்!.. சந்தோஷத்தில் சாண்டி!..
இந்நிலையில், ஹீரோவாக நடிக்கிறேன் என்று சென்ற புகழ் மீண்டும் கோமாளியாக இந்த சீசனில் வருகிறார். குக் வித் கோமாளி சீசன் 4ல் இருந்து திடீரென விலகிய மணிமேகலை வெளியே சரியான வேலை கிடைக்காத நிலையில், மீண்டும் சீசன் 5க்கு வந்திருக்கிறார். குரேஷி, சுனிதா உள்ளிட்டோர் கோமாளிகளாக வருகின்றனர். ரக்ஷன் இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல தொகுத்து வழங்க காத்திருக்கிறார்.
விமானத்தில் இருந்து இறங்கி வருவது போல மாஸ் புரமோவை வெளியிட்டுள்ளனர். மாதம்பட்டி ரங்கராஜ் வரும் போது கூட பிரைவேட் ஜெட்டில் வருவது போன்ற புரமோவை தான் வெளியிட்டு விஜய் டிவி மாஸ் காட்டியது.
இதையும் படிங்க: ‘லியோ’வில் செஞ்ச தப்பு! ‘கோட்’ படத்தில் நடக்கவே நடக்காது.. கண்கொத்தி பாம்பாக சுத்தும் ஏஜிஎஸ்
விஜய் டிவி புகழ் மீண்டும் வந்த நிலையில், அவர் விமானத்தில் வராமல் ஓட்டை சைக்கிளில் வருவது போலவும், விஜய் டிவி ராமர் இந்த சீசனில் குக்காக வருகிறேன் என சொல்ல, குக்கா வந்தா ஒரு சீசன், கோமாளியா வந்தா பல சீசன்கள் என சொல்ல, கோமாளியாவே மாறிடுறேன் என ராமர் சொல்லி விட்டு அவரது சைக்கிளில் ஏற பார்க்கிறார். ஆனால், அவரை விட்டு விட்டு விஜய் டிவி புகழ் கிளம்புவது போல புரமோவை வடிவமைத்துள்ளனர்.
சினிமா வாய்ப்பு தேடி வெளியே கிளம்பியவர்கள் எல்லாம் மீண்டும் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் வந்திருக்காங்களே என்ன ஆச்சு என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…