
Cinema News
தனிக்காட்டு ராஜாவா வரும் கூலி!.. மொத்த தியேட்டரும் தலைவருக்குதான்!..
Coolie: இப்போதெல்லாம் படம் எடுப்பதை விட திட்டமிட்ட தேதியில் எந்த பிரச்சனையும் இன்றி படத்தை ரிலீஸ் செய்வதே பெரிய விஷயமாக இருக்கிறது. ஏனெனில், தயாரிப்பாளர்கள் பல வகைகளிலும் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். ஒருபக்கம் பெரிய நடிகர்களின் படங்கள் அந்த தேதியில் வெளியாகாமல் இருக்க வேண்டும். ரெட் ஜெயண்ட் போன்ற நிறுவனங்கள் வெளியிடும் படங்கள் அந்த தேதியில் வந்தால் அதிக தியேட்டர்களை அவர்கள் எடுத்து கொள்வார்கள்.
சியான் விக்ரமின் வீர தீர சூரன் படம் ரிலீஸாகவுள்ள மார்ச் 27ம் தேதி பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படம் தமிழத்தில் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதால் இரண்டு மொழிக்கும் தியேட்டர்களை லாக் செய்து வருகிறார்கள். வீர தீர சூரன் என்னவாகும் என்பது இனிமேல்தான் தெரியவரும்.

coolie
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம்தான் கூலி. ரஜினியும், லோகேஷும் கை கோர்த்திருப்பதால் இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படத்தில் சத்தியராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர் மற்றும் ஸ்ருதிஹாசன் என பலரும் நடித்திருக்கிறார்கள்.
லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்தால் அது எப்படி வந்திருக்கும் என்கிற ஆர்வமே இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படத்தை ஆக்ஸ்டு 14ம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஏனெனில், 2 வாரங்களில் தொடந்து விடுமுறைகள் வருகிறது.

Coolie
ஆனால், ஹிருத்திக் ரோஷனும், ஜூனியர் என்.டி.ஆரும் இணைந்து நடித்துள்ள War 2 என்கிற பேன் இண்டியா படமும் கூலி படம் வெளியாகவுள்ள ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகிறது. இந்த படத்திற்கு ஆந்திராவில் அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் எனவே கூலி படத்திற்கு ஆந்திராவில் குறைந்த தியேட்டர்களே கிடைக்க வாய்ப்பிருக்கிறது என சொன்னார்கள்.
இந்நிலையில், War 2 படத்தின் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஹிருத்திக் ரோஷனின் காலில் பலத்த அடிபட்டு இன்னும் 2 மாதங்கள் அவரால் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறதாம். எனவே, அந்த படம் ஆகஸ்டு திட்டமிட்டபடி வெளியாகாது என சொல்லப்படுகிறது. எனவே, ஆகஸ்டு 14ம் தேதியில் ரஜினியின் கூலி படம் தனிக்காட்டு ராஜாவாக ரிலீஸாகவுள்ளது.
இதையும் படிங்க: சிம்புக்கிட்ட போனா சும்மா விடுவாரா!.. டிராகன் இயக்குனருக்கு ரூட்டு போட்ட தனுஷ்..