Connect with us

Cinema News

அமெரிக்காவில் அயலானுக்கு ஆப்பு அடித்த கேப்டன் மில்லர்!.. ஐமேக்ஸ் ரிலீஸ் வேற!.. பாக்ஸ் ஆபிஸ் வேட்டை!

2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் நேருக்கு நேர் மோதின. ஆனால், 2024ல் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அடுத்து லைனில் இருக்கும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் இந்த பொங்கலுக்கு நேருக்கு நேர் மோதுகின்றன.

ஏலியன், ஏ.ஆர்.ரகுமான் என ஏகப்பட்ட ஹைப்புகள் இருந்தாலும் அயலான் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாகவில்லை. அதேபோல பல ஆண்டுகள் அதன் மேக்கிங் எடுத்துக் கொண்ட நிலையில், படம் பல இடங்களில் அடி வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எப்படி வருவாரு? அஜித் பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம்

அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள கேப்டன்்மில்லர் திரைப்படத்தின் மேக்கிங் ஹாலிவுட் தரத்தில் உள்ள நிலையில் ஐமேக்ஸ் ஸ்க்ரீன்களிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவில் இந்த பொங்கலுக்கு மற்ற எந்த படங்களும் ரிலீஸ் ஆகாத அளவுக்கு அதிகபட்சமாக 300 திரையரங்குகளில் அமெரிக்காவில் கேப்டன் மில்லர் வெளியாக உள்ளதாக லைக்கா நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை விட சின்ன பையனா மாறிய விஜய்!.. ரசிகர்கள் மத்தியில் வசமா சிக்கிட்டாரே!

இந்த பொங்கலுக்கு அயலான், கேப்டன் மில்லர், மிஷன் 1 மற்றும் மெரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மோதுகின்றன. இதில், தனுஷின் கேப்டன் மில்லர் படம் தான் பாக்ஸ் ஆபீசில் பந்தயம் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் அயலான் படத்தை தீபாவளிக்கே வெளியிட்டு இருக்கலாம் என்றும் பொங்கலுக்கு தனுஷ் உடன் கிளாஷ் விட்டது தவறு என்பதை உணர்வார் என்றும் தனுஷ் ரசிகர்கள் பொங்கி வருகின்றனர்.

அயலான் படத்தின் மீது இன்னும் 2 வழக்குகள் உள்ள நிலையில், திட்டமிட்டபடி படம் ஜனவரி 12ம் தேதி வெளியாவதிலேயே சிக்கல் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top