அப்பா அம்மாவுடன் பஞ்சாயத்து ஓவர் என நிரூபித்த விஜய்!.. ஆனால், அது மட்டும் இன்னும் புகையுதே!..
அப்பா எஸ்.ஏ. சந்திரசேகருக்கு ஆபரேஷன் நடந்த விஷயம் தெரிந்த உடனே வெளிநாட்டில் இருந்து ஓடோடி பார்த்த நடிகர் விஜய்யின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி இதுவரை அப்பா - அம்மாவுடன் பிரச்சனை என்றும் நடிகர் விஜய் அவர்களை சந்திக்கவே மாட்டார் என்றும் கிளம்பிய வதந்திகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
இந்நிலையில், நடிகர் விஜய் பற்றி பரவி வரும் இன்னொரு மோசமான வதந்திக்கும் அவர் கூடிய சீக்கிரமே முற்றுப்புள்ளி வைப்பாரா என்கிற கேள்வி தான் தற்போது தளபதி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: எஸ்.ஏ.சி-க்கு நடந்த ஆபரேஷன்!.. பதறி ஓடிய விஜய்!.. அப்பா – மகன் இணைந்த ஸ்டோரி இதுதானாம்!..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் அதற்கான தீவிர வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகும் தளபதி 68 படத்திற்கான வேலைகளையும் வெளிநாட்டில் சில வாரங்களாக பார்த்து வந்தார்.
இந்நிலையில் தனது தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட விவரம் தெரிய வந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்த நடிகர் விஜய் நேரடியாக தனது தாய் சோபா மற்றும் தந்தையை எஸ்.ஏ. சந்திரசேகரை பார்த்த புகைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் திரையுலகத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: சரிவா.. அதுவும் ஷாருக்கானுக்கா!.. ஜவான் திரைப்படத்தின் 7வது நாள் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!..
அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாகவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதா மற்றும் மகன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா உள்ளிட்டோரையும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக ஏகப்பட்ட வதந்திகள் பரவி வருகின்றன.
லைகா தயாரிப்பில் சஞ்சய் இயக்குனராக அறிமுகமான நிலையிலும் நடிகர் விஜய் தரப்பிலிருந்து எந்த ஒரு வாழ்த்தும் வெளியாகாத நிலையில், அப்பாவுக்கு தெரியாமல் சினிமாவில் நுழைய முயற்சி செய்து வருகிறாரா ஜேசன் சஞ்சய் என்றும் இது எல்லாம் அம்மா சங்கீதாவின் வேலைதான் என்றும் சினிமா பிரபலங்களே ஏகப்பட்ட யூடியூப் சேனல்களில் பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்சனால் லோகேஷ் கனகராஜுக்கு அடிச்ச லக்!.. லியோவில் டபுள் மடங்கா ஏறிய சம்பளம்!..
இந்நிலையில், அந்த வதந்திக்கும் சீக்கிரமே மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நடிகர் விஜய் முற்றுப்புள்ளி வைப்பாரா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மேலும், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகர் விஜயின் மொத்த குடும்பமும் வருகை தருமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.