Connect with us
nelson

Cinema News

நெல்சனால் லோகேஷ் கனகராஜுக்கு அடிச்ச லக்!.. லியோவில் டபுள் மடங்கா ஏறிய சம்பளம்!..

Lokesh Kanagaraj : ஒரே நேரத்தில் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்கள்தான் லோகேஷ் கனகராஜ் – நெல்சன் திலீப்குமார் இருவரும். லோகேஷ் கனகராஜ் மாநகரம் திரைப்படம் மூலமும் நெல்சன் கோலமாவு கோகிலா படம் மூலமும் அறிமுகமானார்கள். இருவருக்குமே முதல் படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

அதன்பின் லோகேஷ் கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என டேக் ஆப் ஆகி பெரிய இயக்குனராக மாறிவிட்டார். நெல்சனும் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுக்கும் இயக்குனராக மாறிவிட்டார். பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்று நெல்சன் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: ஜெயிலர் ஹிட்டுக்கு பின் லியோவில் நடந்த மாற்றம்!.. வெறித்தனமா வேலை பாக்கும் லோகேஷ் கனகராஜ்..

இது நெல்சனுக்கு மன உளைச்சலை கொடுத்தது. ஆனாலும் ரஜினிக்கு கதை சொல்லி ஜெயிலர் படத்தை துவங்கினார். விகடன் விருது வழங்கும் விழாவில் லோகேஷுக்கு கிடைத்த மரியாதை நெல்சனுக்கு கிடைக்கவில்லை. சினிமா என்பது அப்படித்தான். அங்கு வெற்றிகள் மட்டுமே பேசும். இத்தனைக்கும் பீஸ்ட் தோல்விப்படம் கூட கிடையாது. ஆனாலும் அவமரியாதையை சந்தித்தார் நெல்சன்.

நெல்சன் ட்ரோல் செய்யப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார் லோகேஷ். ‘சினிமாவில் இது சகஜம். கண்டிப்பாக அவர் ஹிட் படம் கொடுப்பார்’ என லோகேஷ் சொன்னது போலவே இப்போது ஜெயிலர் எனும் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டார். திரைக்கு பின்னாலும் லோகேஷ் கனகராஜும், நெல்சனும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: 4 மணிக்கு ஆசைப்பட்டு நாசமா போச்சா!.. லியோ படத்துக்கு இப்போ எத்தனை மணி ஷோ தெரியுமா?

லோகேஷ் இப்போது லியோ பட வேலையில் பிஸியாக இருக்க, நெல்சன் ஜெயிலர் எனும் ஹிட் படத்தை கொடுத்துவிட்டு ஓய்வில் இருக்கிறார். அடுத்தும் அவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் நெல்சனால்தான் லோகேஷ் கனகராஜின் சம்பளம் அதிகமானது இப்போது தெரியவந்துள்ளது.

லியோ படம் உறுதியானதும் லோகேஷுக்கு ரூ.12 கோடி மட்டுமே சம்பளமாக கொடுப்போம் என அப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் முடிவெடுத்துள்ளார். அப்போதுதான் ஜெயிலர் படத்தில் ஒப்பந்தமான நெல்சனுக்கு சன் பிக்சர்ஸ் ரூ.22 கோடி சம்பளம் கொடுப்பதாக கேள்விப்பட்டதும் உடனே லோகேஷுக்கு ரூ.20 கோடி என சம்பளத்தை முடிவு செய்தாராம்.

அதேநேரம், இப்போது டிமாண்ட் எகிறியுள்ள நிலையில் நெல்சனும் சரி, லோகேஷ் கனகராஜும் சரி.. ரூ.50 கோடி சம்பளம் கேட்டாலும் கொடுப்பதற்கு தயாரிப்பு நிறுவனங்கள் தயாராகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஜினிக்கு வெண்ணெய்!.. விஜய்க்கு மட்டும் சுண்ணாம்பா.. கத்தரி போடும் சென்சார்.. லியோ தலை தப்புமா?..

google news
Continue Reading

More in Cinema News

To Top