Cinema News
லியோவை மொத்தமாக கழட்டி விட்ட விஜய்?.. தனியாளாக தொண்ட தண்ணி வத்த போராடும் லோகேஷ் கனகராஜ்!..
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாமல் உள்ள நிலையில், ரசிகர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். அதன் விளைவாகவே ரோகிணி தியேட்டரை அடித்து நொறுக்கினோம் என விஜய் ரசிகர்களே பேட்டி கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
ஆனால், இதுவரை நடிகர் விஜய் தனது ரசிகர்களை அமைதிப்படுத்தும் விதமாக ஒரு வீடியோவையோ, ஒரு பதிவையோ கூட போடவில்லை.
இதையும் படிங்க: நம்புங்க பாஸ் நான் அன்பான இயக்குநர் தான்!.. விஜய் ரசிகர்களிடம் திடீரென மன்னிப்புக்கேட்ட நயன்தாரா கணவர்!..
நடிகர் விஜய் தற்போது தனது முழு கவனத்தையும் தளபதி 68 படத்தில் தான் செலுத்தி இருப்பதாகவும் அதன் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்று வருவதாகவும் கூறுகின்றனர்.
நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து ஒரு பேட்டியையாவது வெளியிடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், பீஸ்ட் படத்துக்கும் பண்ணது போல பண்ணினால் அந்த படம் படுத்த மாதிரி படுத்து விடும் என்பதற்காக செய்யவில்லையா? அல்லது நிஜமாகவே விஜய் லியோ படக்குழுவினரை கழட்டி விட்டுட்டாரா? என்றும் சந்தேகங்களை கிளப்புகின்றனர்.
இதையும் படிங்க: தலைவர் 171-ல் இதையெல்லாம் செய்ய போறேன்!.. லோகேஷ் சொன்ன செம சர்ப்பரைஸ்!..
லியோ படத்திற்கு 300 கோடி பட்ஜெட் செலவு செய்த தயாரிப்பாளர் லலித் குமார் வைத்த கோரிக்கை காரணமாகத்தான் ரிலீஸுக்கு முன்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னந்தனியாக தனது 100 சதவீத படமான லியோ படத்தை புரமோட் செய்து வருகிறார். நடிகர் விஜய் கடைசி வரை இந்த படத்துக்கு புரமோட் செய்யாமல் போனால் அதுவே மிகப்பெரிய பின்னடைவை வசூலில் ஏற்படுத்தும் என்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் இருவர் மட்டுமே லியோ படத்தை பற்றி பேசி வருகின்றனர். விஜய், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் யாருமே அந்த படத்தை கண்டுக்கவே இல்லையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. லியோ படத்துக்கு மிஸ்ஸான எல்லாமே தலைவர் 171 படத்தில் இடம்பெறும் என்றும் ரஜினி ரசிகர்கள் கூறி கலாய்த்து வருகின்றனர்.