ரஜினிக்கு 100 படி மேல் விஜய்! அவர நம்பி ஏமாந்துதான் மிச்சம்.. கொதிப்பில் இயக்குனர்

by Rohini |
vijay
X

vijay

Rajini Vijay: தமிழ் சினிமாவில் சமீப காலமாக ரஜினி - விஜய் இவர்களைப் பற்றிய பேச்சு தான் அடிக்கடி அடிபட்டுக் கொண்டிருக்கின்றது. அதுவும் இருவருமே இன்று கோலிவுட்டில் பாக்ஸ் ஆபீஸ் மன்னர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அதனால் இவருடைய ரசிகர்கள் என் தலைவன் பெரியவனா? உன் தலைவன் பெரியவனா? என்ற வகையில் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர்.

மேலும் ரஜினிக்கு இணையான புகழையும் அந்தஸ்தையும் பெற்று வரும் விஜய் அடுத்ததாக அரசியலில் களம் இறங்க காத்துக் கொண்டிருக்கின்றார். இப்போதே அதற்கான ஆயத்த பணிகளை செய்து கொண்டும் வருகிறார். தன்னுடைய மக்கள் இயக்க ரசிகர்களை வைத்து ஏராளமான உதவிகளை செய்து கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: நெப்போலியனை தொடர்ந்து அருண்பாண்டியன் கிட்டயும் வம்பு பண்ண விஜய்! அவரே சொல்றார் பாருங்க

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் தனியாக கட்சி ஆரம்பித்து தன்னுடைய இயக்க நண்பர்கள் மூலமாக கட்சியை வலுப்படுத்த தேவையான வழிமுறைகளை செய்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் சினிமா தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆதம் பாவா ரஜினி அரசியலையும் விஜய் அரசியலையும் வேறுபடுத்தி அவருடைய கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.

மதுரையின் அடுத்த வாரிசு ரஜினி ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர்தானாம் இந்த ஆதம்.பாவா. ரஜினி அரசியலுக்கு வரப்போகிறேன் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிக் கொண்டிருந்த நிலையில் எப்படியாவது தலைவர் அரசியலுக்கு வந்து விடுவார் என்று நம்பியே காத்துக் கொண்டிருந்தாராம்.

இதையும் படிங்க: டாப் 10 நடிகர்களின் முதல் 100 கோடி வசூல்!. என்னென்ன படங்கள்?.. வாங்க பார்ப்போம்!..

அந்த காலத்திலேயே அவரை பின்தொடர்ந்து நானும் அரசியல் செய்ய வேண்டும் என்று நீண்ட ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எங்களை முற்றிலுமாக ஏமாற்றி விட்டார். ஆனால் விஜய் மிகவும் துணிச்சலாக அரசியலுக்குள் இறங்கி இருக்கிறார். இவருடைய துணிச்சல் ரஜினிக்கு இல்லை. ரஜினியையும் விஜயையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது விஜய் ரஜினிக்கு நூறு படி மேல் என்று சொல்லி இருக்கிறார்.

adham bava

adham bava

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அரசியலில் தாக்குப்பிடித்து வரும் சீமானுடன் சேர்ந்து விஜய் அரசியல் செய்தால் முற்றிலுமாக மாறுபட்ட ஒரு தமிழகத்தை நாம் பார்க்க முடியும். அதை விஜய் கண்டிப்பாக செய்ய வேண்டும். அப்படி செய்தால் விஜயின் அரசியல் செழிப்பாக இருக்கும் என்று கூறினார்.

இதையும் படிங்க: அஜித் இல்லைனா நீங்க இல்ல! அருண்விஜயை டென்ஷனாக்கிய நிருபர்.. என்ன பதில் சொன்னார் தெரியுமா?

Next Story