Connect with us
Bhagyaraj, Ilaiyaraja

Cinema History

எந்தக் கருவியும் வாசிக்கத் தெரியாமலேயே மியூசிக் டைரக்டரான பாக்கியராஜ்… இதுக்கு காரணமே இளையராஜாதானாம்!..

தமிழ்சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் கே.பாக்யராஜ். இவரது இயக்கத்தில் வந்த படங்கள் பெரும்பாலும் மெகா ஹிட் தான். இவருக்கு இன்னொரு திறமையும் உண்டு. அதுதான் இசை. இவர் மியூசிக் டைரக்டர் ஆனதே விபத்து என்கிறார். என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

மியூசிக்ல எனக்கு எந்த கருவியும் வாசிக்கத் தெரியாது. ஆனாலும் நான் மியூசிக் டைரக்டரா ஆகியிருக்கேன். அப்போ எனக்கும் இளையராஜாவுக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் இருந்துச்சு. மியூசிக் கத்துக்காம விட்டுட்டோமேன்னு வருத்தப்பட்டேன். அப்போ எனக்கு இங்கிலீஷ் புரொபசரா இருந்தவரு என்னோட நாடகத்துக்கு எல்லாம் அவரு தான் எனக்கு மியூசிக் போடுவாரு. அவருக்கிட்ட மியூசிக் பற்றிக் கேட்டேன். ஆர்மோனியம் வாசிக்கணும்னு சொன்னதும், பாண்டிபஜார்ல போயி வாங்கிட்டு வந்து எனக்குக் கத்துக் கொடுத்தார்.

நான் மியூசிக் கத்துக்கிட்டது ஒரு ஆக்சிடண்ட் தான். எனக்கே தெரியல. என்னை அறியாம டியூன்ஸ் வந்தது. யாரோ சொன்னாங்க என்னங்க என்ற அந்தப் பாடல் அப்படித் தான் வந்தது. 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள்னு 3 படம் தான் வேலை பார்த்தேன். அப்புறம் என்னை ஹீரோவாக்கிட்டாரு. டயலாக் எழுதி, கதை எழுதினதால புரொமோஷன் ஆகிட்டேன்.

Ithu Namma Aalu

Ithu Namma Aalu

அமிதாப்பச்சனை வைத்து இந்தில ஆக்ரி ராஸ்தான்னு ஒரு படம் டைரக்ட் பண்ணினேன். அதில் நான் தான் திரைக்கதை எழுதினேன். இந்தப் படத்துல ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா நடிச்சிருப்பாங்க. தமிழ்ல கமல் நடித்தார். ஒரு கைதியின் டைரி படத்துல கமல் நடிச்சிருப்பாரு. அதை இந்தில நான் டைரக்ட் பண்ணினேன். அப்போ எனக்கு இந்தி வராது. ஆனா இங்கிலீஷ்ல எப்படியோ ஒரு மணி நேரம் அவருக்கிட்ட கதையை சொல்லிட்டேன். சினிமாவில் தன்னம்பிக்கை இருந்தால் நாம எந்த வயசிலனாலும் கத்துக்கலாம்.

இதையும் படிங்க… கமல் அப்படி செய்வாருன்னு யாருமே எதிர்பார்க்கல!… கௌதம் மேனன் என்ன சொல்றார் பாருங்க!..

இதுநம்ம ஆளு, எங்கசின்ன ராசா, ஞானப்பழம், ஆராரோ ஆரிரரோ, பவுணு பவுணு தான் ஆகிய படங்களில் பாக்யராஜ் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொண்ணு பார்க்கப் போறேன் என பிரபுவுக்கும், விஜயகாந்துக்கு தென்பாண்டிச்சீமையிலே படத்திற்கும் இவர் தான் மியூசிக் டைரக்டர்.

1986ல் வர இருந்த படம் காவடிச்சிந்து. இந்தப் படத்தில் தான் பாக்யராஜ் இசை அமைப்பாளர் ஆனார். இதில் எல்லாப் பாடல்களுமே சூப்பர்ஹிட். இந்தப் படத்தில் வந்தது தான் யாரோ சொன்னாங்க பாடல். இந்தப் பாடலை எங்க சின்ன ராசா படத்தில் பயன்படுத்தியுள்ளார். காவடிச்சிந்து படம் இன்று வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top