Cinema News
ரஜினி, கமல் எல்லாம் என் கிட்டயே வரக் கூடாது! ஸ்ரீதேவியா இப்படி சொன்னது?
Sridevi: கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சினிமாவில் பயணித்தவர் நடிகை ஸ்ரீதேவி. அழகிலும் அழகு கொள்ளை அழகு.ஸ்ரீதேவி மூக்குத்தி என்றே பெண்கள் பலரும் மூக்குத்தியை குத்திக் கொண்டு பெருமை பட்ட காலமெல்லாம் உண்டு. தென்னிந்திய சினிமாவிலேயே ஸ்ரீதேவி மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.
16 வயதினிலே படத்தின் மூலம் முதன் முதலில் தமிழில் அறிமுகமான ஸ்ரீதேவியை ஹிந்தியிலும் தான் தான் அறிமுகப்படுத்த வேண்டும் என பாரதிராஜா எண்ணினார். ஆனால் ஹிந்தியில் எல்லாம் நடிக்க மாட்டேன் என முதலில் ஸ்ரீதேவி மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: ஒரு நடிகர்கிட்ட கேட்க கூடாத கேள்வி! பொங்கி எழுந்த சரத்குமார்.. அப்படி என்னத்த கேட்டாங்க
ஆனால் பின்னாளில் தமிழை விட பாலிவுட்டில்தான் ஸ்ரீதேவி அதிகளவு புகழைப் பெற்ற நடிகையாக மாறினார்.ஹிந்தியே வேண்டாம் என இருந்த ஸ்ரீதேவி மும்பை மருமகளாகவே மாறினார். அதுவும் போனிகபூருக்கு இரண்டாவது மனைவியாக மாறினார்.
அம்மா சொல்லை மீறாதவராக இருந்ததனால் அம்மா சொன்ன மாப்பிள்ளையை கரம் பிடிக்க நேர்ந்தது. ஆனால் தமிழில் முதல் படத்திலேயே கோலிவுட்டின் இரு ஜாம்பவான்களான கமல், ரஜினியுடன் இணைந்து நடித்தார். அவரின் அழகை பார்த்து இருவரும் பிரமித்து போனார்களாம்.
இதையும் படிங்க: சீரியலில் இருந்து இப்படி ஒரு ஜாக்பாட்டா? பிரபல இயக்குனருக்கு தயாரிப்பாளர் செய்த சூப்பர் சம்பவம்…
ரஜினி ஸ்ரீதேவியை திருமணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். இந்தப் பக்கம் காதல் மன்னனான கமல் சும்மா இருப்பாரா என்ன? அவரும் ஸ்ரீதேவியை திருமணம் செய்ய எண்ணியிருக்கிறார்.
இருவருமே ஸ்ரீதேவியின் அம்மாவிடம் பெண் கேட்டிருக்கின்றனர். ஆனால் பாரதிராஜாவிடம் ஸ்ரீதேவி ‘இருவரும் என் பக்கமே வரக் கூடாது’ என கூறி விட்டாராம். இதை பாரதிராஜாவே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: சஸ்பென்ஸ் இல்லாமலே சாவு… கோட் படத்தின் மீது ரஜினிக்கு இவ்வளவோ வன்மமா?
ஆனால் ஸ்ரீதேவியின் மரணம் தான் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றும் வருத்தத்தையும் தந்தது என்றும் பாரதிராஜா கூறினார். ஆனால் தாய் சொல்லை மீறாதவராக இருந்தாலும் அதுவே ஸ்ரீதேவியின் வாழ்க்கையில் சில கஷப்ப்பான சம்பவங்கள் நடப்பதற்கும் காரணமாக இருந்தது. பெரும்பாலும் ஸ்ரீதேவியின் வாழ்க்கை பெரும் போர்க்களமாகவே இருந்தது என்று சொல்லலாம்.