Connect with us
vinoth

Cinema History

சதுரங்க வேட்டை உருவான விதம்…தல அஜீத்தோட தொடர்பு எப்படி? சொல்கிறார் சொல்கிறார் துணிவு இயக்குனர்

தற்போது பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தல அஜீத்தின் துணிவு. இந்தப் படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் தனது சினிமா பட அனுபவங்களை இவ்வாறு பகிர்கிறார்.

முதல்ல பார்த்திபன் சார்ட்ட ஒன்றரை வருஷமா ஒர்க் பண்ணுனேன். அப்போ சினிமா செட்டாவுமான்னு தெரில. இஞ்சினியரிங்ல சின்ன சின்னக் கம்பெனில ஒர்க் பண்ணுனேன். மறுபடியும் கோயம்புத்தூர்ல ப்ரண்டோட கம்பெனில ஒர்க் பண்ணிக்கிட்டு இருந்தேன்.

அப்போ ராஜூமுருகன் சார் பழக்கம். அவர் ஒரு படம் தயார் பண்ணினார்…நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி சாரோட பையன்…ரேணிகுண்டா அது ஒரு பத்து நாள் சூட் பண்ணினோம். அப்புறம் நடக்கல. ஒரு வருஷம் கழிச்சி திடீர்னு ராஜூ முருகன் சார் கூப்பிட்டு மில்டன் சார் கூப்பிடுறாரு.

H.Vinoth

H.Vinoth

கோயம்பேடுல சூட் பண்ணனும். ஒனக்குத் தெரிஞ்ச லொகேஷன்ஸ்லாம் காட்டு. மில்டன் சார் நிறைய வாட்டி அந்த இடத்தை எல்லாம் போய்ப் பார்த்துருக்காரு. பட்..அவரு கதைக்குத் தேவையான இடங்கள்லாம் கிடைக்காம இருந்தது. நான் போயி சிலது காட்டுனேன். அவருக்கு அது புடிச்சிருந்தது.

அப்படின்ன உடனே சரி..இதுல நீ ஒர்க் பண்ணுன்னாரு. கோயம்பேடு போர்ஷன்ல மட்டும் ஒர்க் பண்ணினேன். அதுதான் கோலிசோடா. அந்த நேரம் விஜய் ஆண்டனி சார், மனோபாலா சார மீட் பண்ணி சதுரங்க வேட்டை படம் பண்ணினோம்.

Sathuranga vettai

கோலிசோடா படம் ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கும்போதே சதுரங்க வேட்டை படம் கதை விவாதம் போய்க்கிட்டு இருந்தது. அதுல பர்ஸ்ட் ஆப் அவருக்குப் பிடிச்சிருந்தது. செகண்ட் ஆப் மில்டன் சாருக்குப் பிடிக்காம இருந்தது. அதுக்கு அப்புறம் அதை ஒர்க் பண்ணி எடுத்தோம்.

ராஜூமுருகன் சாரோட ரைட் அப் பத்திரிகைல சூப்பரா இருந்தது. ஒரு தடவை எனக்கு அவர் சொன்னாரு. நீ வந்து ஒரு விஷயத்தைப் பார்க்குற விதம் புதுசா இருக்கு. கொஞ்சம் பிசினஸ்சா பொலிட்டிகலா இருக்கு.

இதே மாதிரி ஸ்கிரிப்ட்டும் இருந்தா நல்லாருக்கும். வில்லேஜ் ஸ்கிரிப்ட்லாம் பண்ணாத. இந்த மாதிரி பண்ணு. அப்படின்னு சொன்னபோது எனக்கு அப்போ தான் புதுசா திங் பண்ற ஐடியா கிடைச்சது. அதுல இருந்து வந்தது தான் சதுரங்க வேட்டை.

நான் படிச்சிட்டு நிறைய எஞ்சினீயர்ஸ் கம்பெனிகள்ல வேலை பார்த்தேன். கவர்ன்மென்ட் ஆபீஸ்ல மெயின்டனன்ஸ் கமிட்டில கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். அப்போ அங்கிருக்குற ஸ்ட்ரக்சர் எப்படி இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அப்படித் தான் எனக்கு அந்த பொலிடிகல் விஷயங்கள் தெரிஞ்சது.

Ajith and H.Vinoth

அஜீத் பற்றி இவர் கூறும்போது அஜீத் லைஃப பைக் மெக்கானிக்கா தான ஸ்டார்ட் பண்ணினாரு…அவருக்கு பெரிய விஷயமா தோணுறது அந்த பைக் ரேஸ்தான்னு நினைக்கிறேன்…பேசிக்கலா ஒரு ஆட்டோ மொபைல் இருக்கு.

அஜீத்கிட்ட நிறைய பர்சனல் பற்றி பேசனது இல்ல. அவரு அதிகமாக பேசிக்கிட்டது பைக் ரேஸ் தான். ஒவ்வொரு நாட்டுக்கும் போன பாஸ்போர்ட், ஆக்டிவிட்டி, கல்சர்னு, சீனரீஸ்னு நிறைய இருக்குல்ல.

Also Read: ஷூட்டிங்கிற்கு லேட்டாக வந்த எம்.ஜி.ஆர்… உதவியாளரை பளார் என்று அறைந்த தயாரிப்பாளர்… அடப்பாவமே!!

google news
Continue Reading

More in Cinema History

To Top