Cinema News
அஜித் சினிமாவுக்காக பிறந்தவர் அல்ல! அவருடைய நோக்கம் என்ன தெரியுமா? அதான் இப்படியா?
Actor Ajith: சினிமாவையும் தாண்டி அஜித் அவருடைய பொழுதுபோக்கு அம்சமாக கருதும் பைக் ரேஸ் கார் ரேஸ் இவைகளில் தான் அதிக நாட்டம் செலுத்தி வருகிறார். இத்தனைக்கும் ரேசில் கலந்து கொண்டு ஏகப்பட்ட காயங்களை சந்தித்தவர் அஜித். அப்படி இருந்தும் இந்த 50 வயதிலும் இன்னும் அதில் இருந்து தன்னை விடுபட்டுக் கொள்ளாமல் மேலும் மேலும் அதை நோக்கியே தன்னுடைய பயணத்தை செலுத்தி வருகிறார் அஜித்.
இதன் காரணம் என்னவாக இருக்கும் என பிரபல சினிமா இயக்குனரான பிரவீன் காந்தி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ரட்சகன், ஜோடி ஆகிய படங்களை இயக்கியவர் தான் பிரவீன் காந்தி. இவர் ஒரு சிறந்த ஆன்மீகவாதியாகவும் இருந்து வருகிறார். பெரும்பாலும் இவருடைய பேட்டிகளை பார்க்கும் பொழுது மிகவும் வெளிப்படையாகவும் ஆன்மீகவாதியாக மற்றவர்களின் மனோநிலை எப்படி இருக்கும் என்பதை பற்றியும் அவ்வப்போது கூறி வருகிறார்.
இதையும் படிங்க: 25வது படம்னா சும்மாவா? வெங்கட்பிரபுவை டீலில் விட்ட சிவகார்த்திகேயன்! அவருடைய டார்கெட்டே இவர்தானாம்
இதில் அஜித்தை பற்றியும் பிரவீன் காந்தி கூறியது ஆச்சரியத்தை வரவழைத்தது. அதாவது அஜித்தை அகோரியுடன் ஒப்பிட்டு கூறியிருக்கிறார் பிரவீன் காந்தி. அதை தவறாக சொல்லவில்லை. அகோரி என்பது ஒரு வெறித்தனமாக எதையாவது அடைந்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் வெறிகொண்டு அலைவார்கள். அப்படி தான் அஜித்தும் தற்போது இருந்து வருகிறார் .
சினிமா எல்லாம் அவருக்கு இப்போது தூசு மாதிரி. அதையும் தாண்டி அவர் வேறு எதையோ தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அஜித்தை பொருத்தவரைக்கும் அவர் சினிமாவுக்காக பிறந்தவர் அல்ல. அவருடைய நோக்கமே ஒரு வெறிகொண்டு அரசியல்வாதியாகவோ அல்லது வெறிகொண்ட ஆன்மீகவாதியாகவோ தான் மாறுவார் என்பது என்னுடைய கணிப்பு என பிரவீன் காந்தியின் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: சுனைனாவின் ‘மாப்பிள்ளை’ இவர்தான்… புலம்பும் ரசிகர்கள்!
மேலும் தன் பின்னாடி ஒரு நல்ல குடும்பம் செல்வாக்கு புகழ் இவ்வளவு இருந்தும் இதையும் தாண்டி அவர் வேறு எதையோ நோக்கி செல்கிறார் என்றால் அவருக்குள் ஏதோ ஒன்று தீர்க்க முடியாத ஒரு தாகம் இருந்து கொண்டே இருக்கிறது. எனக்கும் அவருக்கும் ஒரு மீட்டிங்கை ஏற்பாடு செய்யுங்கள். அது என்ன என்பதை அஜித்திடம் பேசி தெரிந்து விட்டு நான் சொல்கிறேன். அது மட்டும் அல்லாமல் இந்த பேட்டியை ஒரு வேளை அஜித் பார்த்தார் என்றால் அவர் கண்டிப்பாக ‘சரியாகச் சொன்னார் பிரவீன் காந்தி’ என்று தான் கூறுவார் .இப்படிப்பட்ட மனோ நிலையில் தான் அஜீத் இப்போது இருக்கிறார் என பிரவீன் காந்தி அந்த பேட்டியில் கூறுகிறார்.