விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. படத்தில் ராணுவம் தொடர்பான சில விஷயங்களை அனுமதி பெறாமல் பயன்படுத்தியிருக்கிறார்கள்.. எனவே இன்னும் சிலர் படம் பார்க்க வேண்டும்.. எனவே மறு தணிக்கைக்காக அனுப்பியிருக்கிறோம் தணிக்கை அதிகாரிகள் சொல்கிறார்கள்.
படத்தை தயாரித்துள்ள கேவிஎன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் தணிக்கை அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதம் செய்து தணிக்கை சான்றிதழை கொடுக்காமல் இருக்கிறார்கள்’ என்று வாதிட்டது. ஆனால் அதை தணிக்கை அதிகாரிகள் இதை மறுத்தார்கள்.
Also Read
இந்த பிரச்சனைகளால் நாளை வெளியாகவிருந்த ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது அநேகமாக வேறொரு தேதியில் படம் ரிலீஸாகும் என தெரிகிறது. இது விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சென்சார் தணிக்கை துறை மத்திய அரசின் கீழ் செயல்படுவதால் இதற்கு பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக விஜய் ரசிகர்கள் கருதுகிறார்கள்.
இந்நிலையில், பராசக்தி பட இயக்குனர் சுதாகொங்கரா தணிக்கை துறைக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்ட படமாக உருவாகியுள்ள பராசக்தி படத்தை பார்த்து ரிவைசிங் கமிட்டி படத்தை சுதந்திரமாக செயல்பட வைத்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. சென்சார் போர்டில் இருப்பவர்கள் ரொம்ப மோசம் என்கிற பேச்சு நிலவுகிறது.. உண்மையில் அவர்கள் அப்படி இல்லை.. சரியான கேள்விகளை கேட்கிறார்கள்.. அதற்கு நாம் சரியான பதிலை கொடுத்தால் படத்தை சுதந்திரமாக செயல்பட விடுகிறார்கள்’ என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் அமீர், கார்த்திக் சுப்பாராஜ் உள்ளிட்ட சிலர் தணிக்கை துறை அதிகாரிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கும் நிலையில் சுதாகொங்கரா ஆதரவாக கருத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



