ரஜினியும் கமலும் சிவாஜிக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா? எப்பவுமே கெத்து சூப்பர்ஸ்டார்தான்..!

Kamal, Sivaji, Rajni
பராசக்தியில் சிவாஜிக்கு மாத சம்பளம் தானாம். சிவாஜியை பல மாதங்கள் நன்றாக சாப்பிட்டு ஓய்வெடுக்கும்படி ஏவிஎம் நிறுவனம் கட்டாயப்படுத்தியதாம். இந்தப் படத்திற்கு மாதம் 250 ரூபாய் சம்பளமாம். இந்த ஒரு படத்திலேயே மெகா ஹிட் அடித்தார் சிவாஜி. 2வது படம் பணம். கலைவாணரின் படம். இதற்காக சிவாஜியை ஒப்பந்தம் செய்தார். இந்தப் படத்திற்கு எவ்வளவு சம்பளம் கேட்பது என அவருடன் இருந்த நண்பர்களே சிவாஜிக்காகப் பேசி 25 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொடுத்தார்களாம்.
இதையும் படிங்க... எம்.எஸ்.வி கன்னத்தில் ‘பளார்’ விட்ட தாய்… கதி கலங்கிய சின்னப்ப தேவர்… ஏன்னு தெரியுமா?
1954ல் எம்ஜிஆருடன் இணைந்து நடித்த கூண்டுக்கிளி படத்திற்கு இயக்குனர் ராமண்ணாவிடம் அட்வான்ஸ் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் சிவாஜி. அதற்குப் பதிலாக உங்கள் கையால் சில வெள்ளிக்காசுகளை மட்டும் கொடுங்கள் என கேட்டு வாங்கினாராம்.
படத்திற்கு சிவாஜிக்குக் கொடுத்த சம்பளம் ரூ.25 ஆயிரம். 1959ல் வெளியான தங்கப்பதுமை படத்திற்கு சம்பளம் ரூ.60 ஆயிரம். கர்ணன் படத்திற்கு சிவாஜியின் சம்பளம் 2 லட்சத்திற்கும் மேல் பந்துலு கொடுத்தாராம். அவர் எடுக்கும் படத்திற்கு என்ன கொடுக்கிறாரோ அதை வாங்கிக் கொள்வாராம். கப்பலோட்டிய தமிழன் படம் முதல் வெளியீட்டில் சரியாகப் போகவில்லை. அதனால் அவரது அடுத்த படமான பலே பாண்டியாவிற்கு சம்பளம் வாங்கவில்லையாம்.
1964ல் வெளியான தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு சிவாஜியின் சம்பளம் இரண்டரை லட்சம். 68ல் வெளியான சிவாஜியின் 125வது படம் உயர்ந்த மனிதன். இதற்கு ஏவிஎம் பேசிய தொகை 1.50 லட்சம். 1969ல் வெளியான ஸ்ரீதர் தயாரித்த சிவந்த மண் படத்திற்கு 3 லட்சம் சம்பளம்.

Padayappa
1971ல் திருலோகசந்தரின் சொந்தப் படம் பாபு. நெருங்கிய நண்பர் என்பதால் சிவாஜி 1.50 லட்சம் சம்பளம் வாங்கினாராம். 1973ல் வெளியான ராஜராஜ சோழன் படத்திற்கு ஏ.பி.நாகராஜன் கொடுத்த சம்பளம் 3 லட்சம். 1979ல் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த படம் திரிசூலம். இது வசூல் சாதனையைப் படைத்தது. 1992ல் கமல் தேவர் மகன் படத்திற்காக 20 லட்சம் சம்பளம் கொடுத்தாராம்.
1997ல் ஒன்ஸ்மோர் படத்திற்கு அட்வான்ஸ் 100 ரூபாய் மட்டுமே வாங்கினாராம். இது இயக்குனர் சி.வி.ராஜேந்திரனின் சொந்தப் படம். இந்தப் படத்திற்கு சிவாஜி வாங்கிய சம்பளம் 10 லட்சம். 99ல் வெளியான படையப்பா படத்திற்கு அட்வான்ஸ் வாங்கவில்லை. இந்தப் படத்திற்கு சிவாஜியின் சம்பளம் ஒரு கோடியாம். எவ்வளவு வெற்றிப்படங்களைக் கொடுத்த போதும் சிவாஜி சம்பளத்தை உயர்த்தியதே இல்லையாம்.
ஸ்ரீதரின் விடிவெள்ளி, பாலாஜியின் தங்கை ஆகிய படங்கள் நல்லா ஓடினால் உங்களால் முடிந்ததைக் கொடுங்க என்று பேசியே நடித்தாராம். எஸ்.வி.சுப்பையாவின் காவல் தெய்வம் படங்களுக்கு பணமே வாங்கவில்லையாம். 1956ல் வெளியான படம் அமரதீபம். அப்போது தான் சிவாஜி பிலிம்ஸ் உருவாக்கப்பட்டது.