latest news

இங்க கதை தான் கிங்கு… தைரியமாக Jailer 2வுடன் மோதும் Drones!

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படம் வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

‘காலங்களில் அவள் வசந்தம், பன் பட்டர் ஜாம்’ ஆகிய படங்களை இயக்கியவர் தான் ஆர்.ராகவ் மிர்தாத். இவர் இயக்கியுள்ள புதிய படம் தான் ‘ட்ரோன்ஸ்’ (Drones).

இதில் சித்தி இட்னானி, அஞ்சலி நாயர், டிராவிட் செல்வம், தேவதர்ஷினி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்ஜே தீபக் ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது, இப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு ஒரு நாள் முன்னாடி தான் நம்ம ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர் 2’ படம் ரிலீஸ் ஆகப்போகிறது. இருப்பினும் ‘ட்ரோன்ஸ்’ டீம் தங்கள் படத்தின் கதையை நம்பி ‘ஜெயிலர் 2’-வுடன் மோதவுள்ளார்கள்.

Author
siva ✓