ஹாட்ரிக் தோல்வியை தவிர்ப்பாரா துல்கர் சல்மான்!.. ஆகாசம்லோ ஒக்க தாரா ரிலீஸ் எப்போ தெரியுமா?..

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆகாசம் லோ ஒக தாரா படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

dulquer

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான ஆகாசம் லோ ஒக தாரா படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், படத்தின் புதிய போஸ்டரையும் நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும்,துல்கர் சல்மான் இதுவரை இந்தப் பயணம் மிகவும் அழகானதாக இருந்துள்ளது. நவம்பர் 20ஆம் தேதி இந்த உலகத்தை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன் என பதிவிட்டிருந்தார். அதில் உங்கள் கிருஷ்ணா என அவர் குறிப்பிட்டிருப்பது இப்படத்தின் அவரது கதாப்பாத்திரத்தின் பெயராக இருக்கலாம்.

பவன் சதினேனி இயக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான், ஸ்ருதி ஹாசன், சத்விகா வீரவள்ளி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் லைட்பாக்ஸ் மீடியா தயாரிப்பில் உருவாகும் இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

இதனிடையே, துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஐ அம் கேம் திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை என்பதால் ‘ஆகாசம் லோ ஒக தாரா’ திரைப்படம் துல்கருக்கு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுத் தருமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. நவம்பர் 20ஆம் தேதி படம் வெளியாகும் வரை காத்திருந்து பார்க்கலாம்.

CR
ஆசிரியர்

adminram

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →