ஜெயிலர் 2வுடன் மோதும் விஜய் ஆண்டனி… அப்பா குட்டி படத்தின் ரிலீஸ் தேதி இதோ…
விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள அப்பா குட்டி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் வரும் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர் 2’ அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு மறுநாளே அப்பா குட்டி வெளியாக உள்ளது.
இயக்குநர் மு.மாறன் அப்பா குட்டி படத்தை இயக்கியுள்ளார். தந்தை மகள் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். பேபி லிதன்யா, பகவதி பெருமாள், முத்துக்குமார், ஜென்சன் திவாகர், அருவி மதன், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளதுடன் தனது விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார். ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகும் இப்படம், ஜெயிலர் 2 படத்துடன் ஒரே வாரத்தில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












