சந்திரமுகி படமே வேஸ்ட்தான்??… தயாரிப்பாளரிடம் கேள்வி கேட்டு வம்பிழுத்த ரசிகர்…

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றித் திரைப்படம் “சந்திரமுகி”. இத்திரைப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பாக பிரபு இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். “சந்திரமுகி” திரைப்படம் 1000 நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனை படைத்த திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஹாரர் காட்சிகள் இப்போது பார்த்தாலும் மிரள வைக்ககூடிய ஒன்றாக இருக்கும். இத்திரைப்படத்தின் வெற்றிக்கு ரஜினிகாந்த்தின் மாஸும் வித்தியாசமான கதையம்சமும் பங்கு வகித்தது என்றாலும் கூட வடிவேலுவின் […]

Update: 2023-01-18 23:53 GMT

Chandramukhi

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றித் திரைப்படம் “சந்திரமுகி”. இத்திரைப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பாக பிரபு இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

Chandramukhi

“சந்திரமுகி” திரைப்படம் 1000 நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனை படைத்த திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஹாரர் காட்சிகள் இப்போது பார்த்தாலும் மிரள வைக்ககூடிய ஒன்றாக இருக்கும்.

இத்திரைப்படத்தின் வெற்றிக்கு ரஜினிகாந்த்தின் மாஸும் வித்தியாசமான கதையம்சமும் பங்கு வகித்தது என்றாலும் கூட வடிவேலுவின் காமெடி இத்திரைப்படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தது.

Chandramukhi

இதனை தொடர்ந்து தற்போது “சந்திரமுகி 2” திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ், ராதிகா சரத்குமார், வடிவேலு, கங்கனா ரனாவத் ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தையும் பி.வாசுவே இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Chandramukhi 2

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் ரசிகர் ஒருவர் “பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸும் வடிவேலுவும் நடித்த சிவலிங்கா திரைப்படம் ஃப்ளாப் ஆனது. இப்போது அதே காம்பினேஷனில் சந்திரமுகி 2 திரைப்படத்தை இயக்கி வருகிறாரே. இதில் நேரமும் பணமும் வீண்தானே?” என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

Shivalinga

அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் “நீங்க ஏன் அப்படி நெகட்டிவா பாக்குறீங்க? சந்திரமுகி படத்தில் பி.வாசுவும் வடிவேலுவும் இணைந்து எப்படிப்பட்ட வெற்றித் திரைப்படத்தை கொடுத்தார்கள் என உங்களுக்கு நன்றாக தெரியும். அப்படி இருக்கும்போது சந்திரமுகி 2 திரைப்படத்தையும் பாஸிட்டிவ்வாக பார்க்கலாமே” என கூறியிருந்தார்.

Tags:    

Similar News