ரஜினி ஹீரோ ஆனதுக்கு காரணமே ராஜ்கிரண்தான்!. இது யாருக்காவது தெரியுமா?!….

Published on: March 18, 2025
---Advertisement---

Rajkiran: ராஜ்கிரணை எல்லோருக்கும் நடிகராகத்தான தெரியும். ஆனால், பல வருடங்களுக்கு முன்பே அவர் ஃபைனான்சியர், வினியோகஸ்தர், தயாரிப்பாளர் என கலக்கியவர் என்பது பலருக்கும் தெரியாது. அவரின் நிஜப்பெயர் மொய்தீன் பாய். 80களில் இந்த பெயரில்தான் சினிமா உலகில் அவர் அறியப்பட்டார்.

சினிமா பின்னணி: துவக்கத்தில் சினிமா ஃபைனான்சியராக இருந்தார். படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு ஃபைனான்ஸ் செய்வார். ஒரு கட்டத்தில் படங்களை வாங்கி வினியோகம் செய்யவும் துவங்கினார். பெரும்பாலும், மதுரை ஏரியாவில் வினியோகம் செய்து வந்தார். பாரதிராஜா கமல் – ரஜினியை வைத்து பதினாறு வயதினிலே படம் எடுத்தபோது அந்த படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை.

பதினாறு வயதினிலே: ஆர்ட் பிலிம் போல இருக்கிறது, மைக்கை பிடித்து டான்ஸ் ஆடி வரும் கமலுக்கு கோவணம் கட்டி காட்டியிருக்கிறீர்கள் என பல காரணங்களை சொன்னார்கள். இந்த படம் ஓடாது என்பதே வினியோகஸ்தர்களின் எண்ணமாக இருந்தது. அப்போது இந்த படம் ஓடும் என நம்பிக்கை வைத்து தைரியமாக வாங்கி தமிழகமெங்கும் வினியோகம் செய்தது மொய்தீன் பாய் எனும் ராஜ்கிரண்தான். அப்படி வெளியிட்டதில் அவருக்கு நல்ல லாபமும் கிடைத்தது.

ராஜ்கிரண் ஹீரோ: பின்னாளில் ராமராஜனை வைத்து சில படங்களை தயாரித்தார். தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா இயக்க என் ராசாவின் மனசிலே படத்தை தயாரித்தார் ராஜ்கிரண். அந்த படத்தில் ராமராஜன் ஹீரோவாக நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், பல படங்களில் நடித்துக்கொண்டிருந்ததால் ராமராஜனால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. எனவே, அந்த படத்தில் ராஜ்கிரணே ஹீரோவாக நடித்தார்.

அதன்பின் ராஜ்கிரண் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார். இப்போது வரை அது தொடர்ந்து வருகிறது. பணத்திற்காக எல்லா படத்திலும் நடிக்கும் நடிகர் ராஜ்கிரண் இல்லை. அவருக்கென சில கொள்கைகள் இருக்கிறது. அது செட் ஆனால் மட்டுமே நடிப்பார்.

ரஜினிக்கே போட்டி: இந்நிலையில், ரஜினி ஹீரோ ஆனதற்கே ராஜ்கிரண் காரணம் என்பது பலருக்கும் தெரியாது. ரஜினி முதன் முதலாக ஹீரோவாக நடித்த பைரவி படத்திற்கு ஃபைனான்சியர் செய்ததே ராஜ்கிரண்தான். ரஜினியின் படங்களை பார்த்துவிட்டு இவரை நம்பி பணம் கொடுக்கலாம் என நம்பி ஃபைனான்ஸ் செய்தார். அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை.

அப்படி ரஜினி படத்திற்கு ஃபைனான்ஸ் செய்த ராஜ்கிரண் பின்னாளில் ரஜினிக்கே டஃப் கொடுத்தார். ‘ரஜினி ஒரு கோடி சம்பளம் வாங்குகிறார். எனக்கு ஒரு கோடியே பத்து லட்சம் வேண்டும்’ என கேட்டு வாங்கினார். அதாவது, ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கினார். ஒருமுறை ரஜினி, ராஜ்கிரண் இருவரின் படம் ஒன்றாக வெளியாகவிருந்த போது ரஜினியே ராஜ்கிரணை தொடர்பு கொண்டு ‘உங்கள் படத்தின் ரிலீஸை தள்ளி வையுங்கள்’ என கோரிக்க வைத்த வரலாறும் உண்டு.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment