நெகட்டிவ் ஷேடில் விஜய்? கொடுக்கிற காசுக்கு கோட் படம் வொர்த்தா? ரசிகர்கள் கருத்து
Goat Movie: இன்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கோட் திரைப்படம் ரிலீஸாகியிருக்கின்றது. தமிழகத்தை தவிர கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்களில் அதிகாலை ஷோவாக நான்கு மணிக்கு படம் ரிலீஸ் ஆகி படத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் திகைத்து வருகிறார்கள்.
இதுவரை படம் நேர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. கேரளாவில் விஜய்க்கு அதிக அளவில் ரசிகர்கள் இருப்பதால் படத்தை பார்த்த கேரளா ரசிகர்களும் என்ன சொல்வது என்று தெரியாமல் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். படம் பார்த்து வெளியே வந்த அனைவரும் ஆரவாரத்தில் கத்தும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: மோகன்லால் சான்ஸ் கொடுக்கலன்னு போட்டுக் கொடுத்துருப்பாங்க… என்ன சொல்றாங்க ஷர்மிளா?
இந்த நிலையில் படத்தை பார்த்த ஒரு சிலர் படம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி கூறியிருக்கிறார்கள். அதில் ரசிகர் ஒருவர் இதற்கு முன் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் விஜய்யை நெகட்டிவ் ஷேடில் இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள் என கூறியிருந்தார். ஆனால் உண்மையான விஜயின் நெகட்டிவ் ஷேடே இந்த படம் தான்.
லியோ படத்தை விட பத்து மடங்கு இந்த படத்தில் விஜய்யின் கேரக்டரை வெங்கட் பிரபு உருவாக்கி இருக்கிறார் என கூறியிருக்கிறார். மேலும் இவ்ளோ காசு கொடுத்து பார்க்கிறதுக்கு படம் உண்மையிலேயே வொர்த்தான் என்றும் அந்த ரசிகர் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: படுத்துக்கிடந்து எச்சில் துப்பினது யாரு? ராதிகாவைப் பொளந்து கட்டிய பயில்வான்!
மேலும் விஜயகாந்த் வருகிற சீன் தியேட்டரில் அந்த அளவுக்கு மாஸாக இருந்தது என்றும் கடைசி முப்பது நிமிட கிளைமாக்ஸ் காட்சியும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஒட்டுமொத்தத்தில் வெங்கட் பிரபு படத்தை வேற ஒரு தளத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் வரும் காட்சியும் வேற லெவல். மொத்தத்தில் இந்த படம் விஜய் ரசிகர்களுக்கும் தல தோனி ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்திருக்கிறது என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் கண்டிப்பாக இந்த படத்தை வந்து பாருங்கள். படத்தை பார்த்தவர்கள் தயவுசெய்து படத்தில் இருக்கும் ட்விஸ்ட்களை வெளியில் விடாதீர்கள்.
இதையும் படிங்க: மங்காத்தாவ விட ஆயிரம் மடங்கு!.. கோட் படத்தை கொண்டாடும் ஃபேன்ஸ்!.. டிவிட்டர் விமர்சனம்…
அனைவரும் வந்து படத்தை பாருங்கள் என்றும் படம் பார்த்த ரசிகர்கள் கூறி வருகிறார்கள். படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு. ஒவ்வொருவருக்கும் படத்தில் பெரிய அளவில் முக்கியத்துவம் இருக்கிறது என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆக மொத்தம் படத்தை பற்றி இதுவரை எந்த ஒரு எதிர்மறையான விமர்சனமும் வரவில்லை. படத்தை அனைவருமே கொண்டாடி வருகிறார்கள் என்பதுதான் உண்மை.