Connect with us

Cinema News

இது அது இல்ல!.. கோட் படத்தோட செகண்ட் சிங்கிள் சூர்யா படத்தோட காப்பியா?.. முடிச்சிவிட்ட ஃபேன்ஸ்!..

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தின் இரண்டாவது பாடல் நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாகிறது என்கிற அறிவிப்புடன் அந்த பாடலில் இருந்து இரண்டு வரிகள் மட்டுமே தற்போது வெளியாகின. மறைந்த பாடகி பவதாரணியின் குரல் மற்றும் விஜயின் ஹம்மிங்கை விஜய் ரசிகர்கள் சிலாகித்து வரும் நிலையில், இந்தப் பாடலுக்கு நெட்டிசன்கள் ஆப்பு வைத்து விட்டனர்.

சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இடம்பெற்ற இரவா பகலா பாடலில் வரும் “ என்னைத் தொடும் தென்றல் உன்னை தொடவில்லையா” ட்யூனை காப்பி அடித்து யுவன் சங்கர் ராஜா கோட் படத்துக்கு பயன்படுத்தி இருக்கிறார் என கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சல்யூட் போட வச்ச தம்பதி.. கோலிவுட்டிலேயே இவங்கதான் ஃபர்ஸ்ட்.. மாஸ் காட்டிய சினேகா பிரசன்னா

பூவெல்லாம் கேட்டுப்பார் படத்துக்கும் கவனிச்சுக்க ராஜா தான் இசையமைப்பாளர் என்பதால், விஜய்க்காக புதிதாக எந்த ஒரு இசையையும் உருவாக்காமல் தனது பழைய பாடல்களை பட்டி டிங்கரிங் பார்த்து யுவன் சங்கர் ராஜா ஒப்பேற்றி விட்டார் என விஜய் ஹேட்டர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

கோட் படத்தின் செகண்ட் சிங்கிளான சின்ன சின்ன கண்கள் பாடல் முழுவதும் நாளை தான் வெளியாக உள்ள நிலையில், தற்போது வெளியான சின்ன கிளிம்ப்ளை கேட்டே அந்த பாடல் இந்த படத்தில் இருந்து சுடப்பட்ட பாடல் என சோலியை முடித்துள்ளனர்.

இதையும் படிங்க: இன்னைக்கு நைட் யாரும் தூங்கிடாதீங்க!.. கோட் டீசர் க்ளிம்ப்ஸ் வருது!.. அர்ச்சனா கல்பாத்தி அடிபொலி!..

ஏற்கனவே யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் விசில் போடு பாடல் ரசிகர்களை பெரிதளவில் கவராத நிலையில், இரண்டாவது பாடலின் நிலமையும் இப்படி ஆகிவிட்டது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

நடிகர் விஜய் அரசியலில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த நிலையில், அவர் நடித்துள்ள கோட் படத்திற்கு அனைத்து இடங்களில் இருந்தும் எதிர்ப்புகளும் நெகட்டிவ் விமர்சனங்களும் குவியத்தான் செய்யும் தளபதி ரசிகர்கள் தான் விஜய்க்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜெயிச்சுட்டா உங்கள வந்து சந்திப்பேன்.. அஜித்திடம் சவால் விட்ட நடிகர்! கடைசில என்னாச்சு தெரியுமா?

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க..

https://x.com/chandru_war/status/1804135441656090752

google news
Continue Reading

More in Cinema News

To Top