டபுள் தளபதி சம்பவத்துக்கு ரெடியா? நீங்களே இப்படி இறங்கி வந்தா எப்படி? பெரிய இடமே சொல்லியாச்சு…

Published on: August 17, 2024
---Advertisement---

Goat Movie: விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் கோட் படத்தின் டிரைலர் தான் தற்போதைய சமூகவலைத்தள சென்ஷேசனாகி இருக்கும் நிலையில் கூகுள் நிறுவனமே இறங்கி வந்து போட்டிருக்கும் ட்வீட் தற்போது வைரலாக தொடங்கி இருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தினை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கும் கோட் பாடல்கள் இதுவரை பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

இதையும் படிங்க: மாஸ்டர் சாதனையை முறியடிக்குமா கோட்?!.. ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன?!..

இதனாலே இதுவரை கோட் படத்திற்கு விஜய் ரசிகர்கள் பெரிய கொண்டாட்டமாக கருதவில்லை. படக்குழுவும் இதை படத்திற்கு பாசிட்டிவ் விஷயமாகவே கருதுகின்றனர். படத்தின் ரிலீஸ் நெருங்கிவிட்டதால் டிரைலரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.

இப்போ அப்போ எனக் கூறிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒருவழியாக தேதியை வெளியிட்டார். இந்நிலையில் கோட் டிரைலர் இன்று வெற்றிகரமாக வெளியானது. யாரும் எதிர்பார்க்காத அளவில் நல்ல வரவேற்பை பெற்றும் வருகிறது.

இதையும் படிங்க: என்னங்க அம்புட்டு பஞ்சமா? தங்கலான் படத்திலும் இதை செய்ய போறாங்களா?… விக்ரம் சொன்ன நியூஸ்…

பாடல்களுக்கு பெரிய அளவில் விமர்சிக்கப்பட்ட யுவன் பின்னணி இசையில் கலக்கி இருக்கிறார். இதனால் கோட் திரைப்படத்தின் வியூஸ்கள் குவிந்து கொண்டு இருக்கிறது. தொடர்ச்சியாக எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டுள்ளது.

இந்நிலையில் கூகுள் எக்ஸ்தளத்தில் இருந்து, இரட்டை தளபதி சம்பவத்துக்கு ரெடியா என்ற கேள்வியுடன் எ லயன் இஸ் ஆல்வேஸ் எ லயன் என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு கோட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி புகைப்படத்துடன் பதிவிட்டு உள்ளனர். தற்போது இந்த பதிவு விஜய் ரசிகர்களால் வைரலாக பரப்பப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.