Connect with us

Cinema History

அரசியலை முன்பே தெரிந்த இவர் ஒரு ஞானி தான்…! கல கல கவுண்டமணி ஸ்பெஷல் காமெடீஸ்..!!!

கவுண்டமணியின் காமெடி என்றாலே ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். டைமிங் காமெடியில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. அப்படி ஒரு காமெடி தான் இது.

அந்தக்காலத்திலேயே இன்றைய அரசியலை புட்டு புட்டு வைத்துள்ளனர் கவுண்டமணி செந்தில் காமெடி இரட்டையர்கள். இது இடம்பெற்ற படம் வேலுச்சாமி. அந்தக் காமெடியை கொஞ்சம் அலசுவோம்.

நான் ஒரு அர்த்தக்கூலி…நீ ஒரு அன்னக்காவடி…இதை வச்சிக்கிட்டு எப்படிடா கட்சி ஆரம்பிக்கிறதுன்னு கேட்பார்…

இதுக்குல்லாம் கத்தை கத்தையா பணம் தேவையில்ல…கட்சி ஆரம்பிச்சவன்லாம் பணத்தை வச்சிக்கிட்டா கட்சி ஆரம்பிச்சான்…னு செந்தில் கேட்பார். உடனே கவுண்டமணியின் காதில் ஏதோ சொல்வார். உடனே கவுண்டமணி ஆச்சரியத்துடன் வாயைப் பிளந்து அவரான்னு கேட்பார். ஆம்…திருட்டு சைக்கிள்ல வந்தவரு…அந்த பேங்க் இல்ல. 500 கோடி தேறும்.

அடேங்கப்பான்னு சொல்வாரு…அப்புறம் காதைக் கொடுங்கன்னு ஏதோ செந்தில் சொல்ல, ஆமா…அவரான்னு கேட்பார் கவுண்டர். லாரில வந்தவரு. பொண்டாட்டி எத்தனை இருக்குன்னு அவருக்கே கணக்குத் தெரில. அப்போம் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும்னு கணக்கு போடுங்க…எல்லா பேரும் நம்மள மாதிரி வந்தவங்க தானன்ணேன்..!!!

கட்சில 25 ஆயிரம் தொண்டர்களை சேர்த்தாக்கூட தலைக்கு 5 ரூவா சந்தா வச்சா ஒரு லட்சம் ரூவா வருது.. 175 ரூவா எங்க? ஒரு லட்ச ரூவா எங்க? எந்தத் தொழில்ல இவ்ளோ லாபம் கிடைக்கும்?

ஆமா…நாம கட்சி ஆரம்பிக்கப்போறோமே…தொண்டர்களா யாரை சேர்க்கறது? கட்சியிலே சேராதவங்களப் பார்த்து கட்சில இழுக்கணும்…டேய் கட்சில சேராதவன் நாட்டுல எவன்டா இருக்கான்? அவ்வளவு கட்சி இருக்குடா…ஒருத்தன் ரெண்டு பேரு இருப்பான்ணேன்…

கட்சில சேராதவங்கள வச்சி கட்சி ஆரம்பிக்கப் போறோம்…அதையே பேரா வச்சா என்ன? கசேக…அப்படின்னா என்னன்ணேன்? கட்சியிலே சேராதோர் கட்சி..ஆகா அபாரம் கசேக வாழ்க…ன்னு செந்தில் கோஷம் போட அது வாழ்றது இருக்கட்டும். இதை எப்படி ஜனங்க மத்தில கொண்டு போய் சேர்க்கறதுன்னு கவுண்டர் கேட்க…மீட்டிங் போட்ற வேண்டியதுதான்…னு சொல்ல…போடுறா…போடுறான்னு கத்துவார் கவுண்டர்.

கட்சி மீட்டிங் ஆரம்பிக்கும் முன் ரகசியமாக ஒருவரிடம் செந்தில் டேய் அண்ணன் மேல செருப்ப மட்டும் கவனமா வீசுன்னு சொல்வார். டேய் ஏன்டா செருப்ப வீசச் சொல்றன்னு கேட்பார். அண்ணே அப்ப தான் ஜனங்களுக்கு உங்க மேல ஒரு சிம்பத்தி வரும். அப்புறம் ஓட்டு வரும். காசு வரும். ஓட்டு வரும் காசு வரும்னா செருப்புல என்ன வேறு எதுல வேணாலும் அடிக்க சொல்லு என்பார் கவுண்டர்.

Goundamani, Senthil

கூட்டம் ஆரம்பித்து சில வினாடிகள் கவுண்டர் பேசத் தொடங்கியதும் ஒருவர் எழுந்து இந்த கசேக ஜனங்களுக்கு என்னங்க செய்யும்னு கேட்பார். ஒண்ணும் செய்யாது. சந்தா மட்டும் வாங்கும். உங்கள உண்ணாவிரதம் இருக்காது. மரத்த வெட்டி குறுக்க போட சொல்லாது.

லாரி பஸ்ல ஏத்தி இந்தியாவ தாண்டிக் கொண்டு விட்டுட்டு அங்கிருந்து நடந்து வர சொல்லாது. நீங்க காசக் கட்டிட்டு வீட்ல நிம்மதியா தூங்கலாம். நாங்க கட்சி ஆபீஸ்ல நிம்மதியா தூங்கலாம். இதுதான் எங்க கசேக வோட மாபெரும் கொள்கைன்னு சொல்வார்.

அப்போது சரத்குமார் கட்சி அலுவலகத்திற்கு வருவார். வேலுச்சாமி நம்ம கட்சி ஆபீஸ்க்கு இன்னிக்கு தான் வந்துருக்க. நாம தான் ஆட்சியப் பிடிக்கிறோம். பிடிச்ச உடனே நான் தான் சீப் மினிஸ்டர். நீ அசிஸ்டண்ட் சீப் மினிஸ்டர். உங்களுக்கெல்லாம் அரசியல்லாம் கூத்தா போயிடுச்சுன்னு சரத்குமார் சொல்வார். இந்த உலகமே ஒரு கூத்தாடி மேடை..அதுல நாமெல்லாம் நடிக்கிறவங்க…ஆர்டிஸ்ட்…

அப்போ ஒரு தொண்டர் எழுந்து அப்படின்னு ஷேக்ஸ்பியர் சொல்லிருக்காருன்னு சொல்வார். பளார் என அவருக்கு கவுண்டர் ஒரு அறை விடுவார்.

ஏன்ணேன் அடிக்கிறீங்கன்னு கேட்பார். இந்த உலகத்தில உண்மையை சொல்லலாமாடா…நாமெல்லாம் யாரு? அரசியல்வாதிங்க..நம்ம யோக்கியதை என்ன? அந்தஸ்து என்ன? கவுரவம் என்ன? படிப்பு என்ன? நம்ம உண்மை பேசலாமா? எது சொன்னாலும் தலைவர் சொன்னாருன்னு வெளியே போயி சொல்லணும்.

யாருறா அவரு ஷேக்ஸ்பியரு? அடிக்கடி ஷேக்ஸ்பியர் ஷேக்ஸ்பியர்ங்கற…? அவரும் நீயும் கிளாஸ்மட்டா? ஒரே பெஞ்சுல உட்கார்ந்து படிச்சீங்களா? ஓடிப் போடா நாயே…! இந்தா நாயே எடுத்துப் போடான்னு எதையோ தூக்கி வீசுவார் கவுண்டர்.

திரையரங்கமே அதிரும் இந்தக் காட்சியில்….இப்போது வரை உள்ள அரசியலை அன்றே தோலுரித்துக் காட்டியுள்ளார் கவுண்டமணி. அதனால் தான் அவரது காமெடிக்கு இன்றும் மவுசு.

goundamani and senthil

தொடர்ந்து சரத்குமார் நீயெல்லாம் ஆட்சிக்கு வந்தா நாட்டுக்கு என்ன பண்ணுவன்னு கேட்பார். கேள்வியே தப்பு. முதல்ல நான் எனக்கு என்ன பண்ணிக்குவேன்னு கேளு. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. முதல்ல 2 கல்யாண மண்டபம் கட்டுவேன். அதென்ன 2 கல்யாண மண்டபம்? ஒரே டயத்துல ரெண்டு பொண்ணு கழுத்துல தாலி கட்டுவேன். குறுக்கே கேள்வி மட்டும் கேட்காத. அடுத்த திட்டத்தைக் கேளு. சொல்றேன். ஒரு நிமிஷம். ஆல் மெம்பர்ஸ் கோ அவுட்சைடு…ன்னு கத்த அனைவரும் வெளியே சென்று விடுவர்.

மேசையைத் தட்டியபடி 10 பங்களா கட்டணும். 20 கார் வாங்கணும். ஊட்டில ஊர் எனக்கு சொந்தம். டீ தான் மத்தவங்களுக்கு சொந்தம். கொடைக்கானல்ல கொடை எனக்கு சொந்தம். கானல் தான் மத்தவங்களுக்கு சொந்தம்.

அப்புறம் இந்த ஆப்பிள் தோட்டம், காபி தோட்டம், ஆரஞ்சு தோட்டம், ஓட்டல்ல பைவ் ஸ்டாரு, திரி ஸ்டாரு, டூ ஸ்டாரு, சைடுல சுவிஸ் பேங்க்ல ஒரு 50 கோடி….என்னண்ணேன்…னு சரத் ஆச்சரியத்துடன் கேட்க…பணம் தான்…இதெல்லாம் போக கஜானால மீதி ஏதாவது பணம் இருந்தா….நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்யலாமான்னு சிந்திப்பேன்.

நீயும் அரசியலுக்கு வந்துரு. உனக்கும் ஆப்பிள் தோட்டம், காபி தோட்டம்லாம் உண்டு. நான் நேரம் வரும்போது வந்து உங்கள மாதிரி ஆள்கள எல்லாம் ஒழிச்சிடுறேன்னு சரத் சொல்ல…அப்படீன்னா நீ வர வேண்டாம் என்பார் கவுண்டர்.

ஒரு கட்டத்தில் செந்தில் கொந்தளித்துப் போய் உறுப்பினர்களை ஒன்று திரட்டி தலைவர் செய்றது சரியில்ல…ன்னு சொல்லி மீட்டிங் போடுவார்…அப்போது கவுண்டர் பக்கத்து ரூமில் ஒரு பெண்ணுடன் குஜாலாக இருப்பார். அப்போது அவருக்கு காதுபட தலைவரே பொதுக்குழுவ கூட்டியாச்சு…நீங்க வெளிய வர்றீங்களா? இல்ல நாங்க அங்க வரட்டுமான்னு.. குரல் ஒலிக்கும்.

என்னடா பொதுக்குழு செயற்குழுன்னுட்டு…இந்த நாய்ங்க பண்ற இம்சை தாங்க முடியலயே…எதுவும் கூட பேச விட மாட்டேன்றாங்கள…இன்னிக்கு ரெண்டுல ஒண்ணப் பார்த்துடறேன்…நீ வான்னு தோளோடு அவரை அணைத்து வெளியே வருவார்.

என்னடா சவுண்டு கொடுக்கறீங்க…தலைவரே பொதுக்குழுவக் கூட்டிருக்கோம்…என ஒருவர் சொல்ல…நீங்க அந்தப் பொண்ண வச்சிருக்கறது இந்தத் தொண்டருக்குப் பிடிக்கலன்னு செந்தில் போட்டுத் தாக்குவார்.

அவருக்குப் பிடிக்கலன்னா உடு. எனக்குப் புடிக்குதுன்னு அந்தப்பெண்ணை இழுத்து அணைப்பார். அப்போது தொண்டனுக்குப் பதில் சொல்லித் தான் ஆகணும்னு தொண்டர் கத்துவார். என்ன நீ பெரிய தொண்டன்..தெனம் 5 ரூபா டீ செலவுக்கு என்கிட்ட வாங்கிட்டுப் போற…ஒனக்கு நான் பதில் சொல்லணுமா?ன்னு கேட்பார் கவுண்டர்.

என்னன்ணே இப்படி பேசுறீங்க…அப்படித்தான் சொல்வேன்…இந்தப்பார். இவ தலைவி. நான் தலைவன். இஷ்டம் இருக்கறவன் கட்சில இருங்க…இல்லேன்னா வெளியே போங்கடா நாய்ங்களா…ன்னு கவுண்டர் கத்த கலகலப்புக்குப் பஞ்சமில்லாமல் திரையரங்கம் சிரிப்பலையால் அதிரும்.

google news
Continue Reading

More in Cinema History

To Top