Cinema News
விஜய்க்கு ‘இளைய தளபதி’ பட்டத்தை கொடுத்தவர் யார் தெரியுமா?!.. ஒரு ஆச்சர்ய தகவல்!…
Actor Vijay : சினிமாவில் நடிகர்களுக்கு பட்டங்கள் கிடைப்பது என்பது பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது. காதல் மன்னன், புரட்சித்தலைவர், நடிகர் திலகம், புரட்சி தமிழன், சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், ஆக்ஷன் கிங் என பட்டங்களை சினிமா உலகம் பார்த்துள்ளது. இதில், சில பட்டங்கள் மட்டுமே சிலருக்கு பல வருடங்கள் நீடிக்கும்.
சில நடிகர்களுக்கு பல பட்டங்களும் கிடைக்கும். சில நடிகர்களுக்கு பட்டம் என்பது மாறிவிடும். ரஜினி தனது சூப்பர்ஸ்டார் பட்டத்தை பல வருடங்களாக கையில் வைத்திருக்கிறார். அந்த பட்டத்தை பிடிக்க யாராலும் முடியவில்லை. அடுத்த சூப்பர்ஸ்டார் என யாராலும் ஆக முடியவில்லை. விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என சிலர் கொளுத்திப்போட்டு அது அடங்கவே சில மாதங்கள் ஆனது.
இதையும் படிங்க: அதுக்கு முதல்ல நீ ஜெயிக்கணும் பிகிலு!. விஜயை பங்கமாக கலாய்த்த புளூசட்ட மாறன்…
ஆனால், ஜெயிலர் வெற்றி மூலம் நானே நிரந்தர சூப்பர்ஸ்டார் என ரஜினி விஜய்க்கு காட்டிவிட்டார். விஜயும் அதை புரிந்துகொண்டதாகவே தெரிகிறது. ஏனெனில், நேற்று நடந்த லியோ வெற்றி விழாவில் ‘சூப்பர்ஸ்டார்னா அது ஒருத்தர்தான்’ என விஜய் பேசி இந்த பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
விஜய்க்கு கூட முதலில் ‘இளைய தளபதி’ என்கிற பட்டம்தான் கிடைத்தது. ஆனால், இப்போது தளபதி என்றே அவரை அவரின் ரசிகர்களும், சினிமா உலகினரும் அழைக்கிறார்கள். இந்த பட்டங்கள் பற்றி சில வருடங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் விஜய் அளித்த பேட்டியில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: ரஜினிக்கு கலாநிதி மாறன்னா விஜய்க்கு இவர்தான்! இவர விட்டுராதீங்க தளபதி – 2026க்கு தேவைப்படும் முக்கியமான பீஸு
எனக்கு ஒரு ரசிகர் இருக்கிறார். எனக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதுவார். அதை நான் படித்துப்பார்ப்பேன். ரஜினி சார் நடித்த தளபதி வெளியான நேரம் அது. எனக்கு அந்த ரசிகர் எழுதிய கடிதத்தில் என்னை ‘இளைய தளபதி’ என குறிப்பிட்டிருந்தார். எனவே, எனக்கு ‘இளைய தளபதி’ எனும் பட்டத்தை முதலில் கொடுத்தது அவர்தான்’ என விஜய் பேசியிருந்தார்.
இப்போது ‘இளைய’ என்பதை கட் செய்துவிட்டு எல்லோரும் அவரை தளபதி என அழைக்கிறார்கள். நேற்று விழாவில் பேசிய விஜய் ‘உங்களுக்கு கீழே இருக்கும் தளபதி நான்… நீங்கள் ஆணையிட்டால் நான் செய்து முடிப்பேன்’ என அரசியல் பன்ச்சுடன் பேசியுள்ளார். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: அப்பா சட்டைக்கும்!.. அப்பா சேருக்கும் பையன் ஆசைப்படுறது தப்பில்லையே!.. விஜய் சொன்ன அந்த அப்பா யாரு?..