என்னை கேட்டா யூஸ் பண்ணாங்க!.. பாட்டும் அப்படித்தான்!.. மீண்டும் இளையராஜாவை சீண்டும் வைரமுத்து!..

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் இளையராஜாவை மறைமுகமாக சீண்டும் வகையில் வைரமுத்து தனது பேச்சை அரங்கேற்றி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் சலசலப்பை உண்டாக்கியுள்ளார். என்ன சொன்னார்னு பார்க்கலாமா...

சினிமா உலகில் எல்லா இயக்குனர்களும் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் அதை ஆக்குவதில் தான் இருக்கிறது. தலைப்பு என்பது எங்களுக்குப் புதிதல்ல. நான் எழுதிய முதல் பாட்டு 'பொன்மாலைப் பொழுது'. அது ஒரு படத்திற்கு தலைப்பானது. புதுக்கவிதைக்கு நான் எழுதிய பாட்டு 'வெள்ளைப்புறா ஒன்று'. அது ஒரு படத்திற்குத் தலைப்பானது. என் பல்லவி 'பூவே பூச்சூடவா'. அது ஒரு படத்திற்கு தலைப்பானது. இப்போது தான் தெரிந்து கொண்டேன்.

இதையும் படிங்க...வெற்றிமாறன் எழுதலை… சூரி பெயர் போடலை… என்னங்க குழப்புறீங்க… இயக்குனர் சொன்ன சீக்ரெட்…

'திருப்பாச்சி' என்பது கூட என் பாட்டோட தலைப்பு. 'நீ தானே என் பொன்வசந்தம்' என் பாட்டோட தலைப்பு. 'விண்ணைத் தாண்டி வருவாயா' என்பது என் பாட்டின் தலைப்பு. இவர்கள் யாரும் என் தோழர்களே. வைரமுத்துவைப் பார்த்தோ, தொலைபேசியில் கேட்டோ இந்த தலைப்பைப் பயன்படுத்தியதில்லை. அத்தனை பேரும் வைரமுத்து நமக்கானவன். தமிழ் நமக்கானது என்ற உரிமையில் எடுத்துக் கொள்கிறார்கள்.

நீங்கள் கேட்பதில்லையா என சிலர் கேட்டார்கள். நான் ஜெயகாந்தனின் பதிலைச் சொன்னேன். 'புதிய வார்ப்புகள்' உங்கள் படைப்பு அல்லவா? அதை பாரதிராஜா படமாக எடுத்தாரே. உங்களைக் கேட்டார்களா என்று அவரிடம் கேட்டபோது ‘ நான் ஏன் கேட்க வேண்டும்?. இல்லாதவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்’ என சொன்னார். அதுதான் எனது பதிலும். இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க... அஜித்திடம் சரண்டர் ஆவதை தவிர வேற வழியில்ல!.. கை மாறும் ஏகே 64.. அப்போ ஹிந்தி கனவு?!..

இந்தப் பேச்சைப் பார்க்கும்போது இளையராஜா தன் பாடல்களுக்கு காப்புரிமை கேட்பதை மறைமுகமாக சாடுகிறார் என்றே தெரிகிறது. இதற்கு முன் இளையராஜா பாடல்களுக்கு காப்பிரைட் கேட்டால் எனக்கும் அந்தப் பாடலை எழுதிய முறையில் காப்புரிமை கேட்பதற்கு உரிமை உண்டு என்று வைரமுத்து சொன்னது குறிப்பிடத்தக்கது. இசையா, மொழியா என்ற சர்ச்சை அப்போது எழுந்தது.

Related Articles
Next Story
Share it