வாடிவாசலில் சூர்யாவுக்கு பதில் அந்த நடிகரா?!.. வெற்றிமாறன் போடும் புது ஸ்கெட்ச்...
Vadivasal Movie: அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘வாடிவாசல்’. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருந்த இந்தப் படம் சில பல காரணங்களால் டேக் ஆஃப் ஆகாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
அதிக செலவில் போட்டோ சூட் எல்லாம் நடத்தியிருக்கிறார்கள். வாடி வாசல் படத்திற்காக சூர்யா தனியாக ஒரு மாட்டையே வாங்கி அதை வளர்த்தும் வந்தார். இந்தப் படத்திற்காக தன் உடம்பையும் கட்டுக் கோப்பாக காத்து வந்தார்.
இதையும் படிங்க: கோட் படத்துல விஜய்க்கு இப்படி ஆகிடும்!.. வெளியான போட்டோ!.. ஷாக்கான தளபதி ஃபேன்ஸ்!…
இது சம்பந்தமான பல புகைப்படங்கள் அந்த நேரத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் சூர்யா வேறொரு படங்களில் பிஸியாக நடிக்க இந்தப் பக்கம் வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிஸியாகி விட்டார். அதனால் வாடிவாசல் திரைப்படம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
இந்த நிலையில் மீண்டும் வாடிவாசலை தொடங்க வெற்றிமாறன் திட்டமிட்டிருக்கிறார். ஆனால் சூர்யா நடிப்பாரா என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்து வருகிறது. காரணம் இந்தப் படத்தில் அமீர் நடிக்கிறார் என்பதுதான். சமீபத்தில் இது சம்பந்தமாக சூர்யாவிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாம். வாடிவாசல் படத்திற்காக ஆறு மாதம் கால்ஷீட் கேட்டதால் சூர்யா கொஞ்சம் தயங்குகிறாராம்.
இதையும் படிங்க: விடிய விடிய பாத்தாலும் வெறி குறையாது!.. தூக்கலா காட்டி அசர வைக்கும் யாஷிகா….
ஏனெனில் அவர் ஹிந்தியில் ஒரு படம். வெப் சீரிஸ், சுதா கொங்கராவுடன் ஒரு படம் என மிகவும் பிஸியாக இருப்பதால் ஆறு மாசம் என்பது சாத்தியப்படாது என்று சொல்லப்படுகிறது. இதனால் சூர்யாவுக்கு பதில் வேறொரு நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.. அவர் யாருமில்லை. நடிகர் சூரிதான்.
சூரி அதே மதுரை ஊரை சேர்ந்தவர்தான். மாட்டையும் வளர்த்து வருகிறாராம். சமீபகாலமாக சூரியின் படங்கள் மீது நல்ல வரவேற்பும் இருந்துவருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் சூரியின் நடிப்பை அனைவரும் பார்த்திருப்போம். அதனால் மறுபடியும் வெற்றிமாறன் அழைத்தால் கண்டிப்பாக சூரி வருவார் என்று சொல்லப்படுகிறது. அதனால் ஒரு 80 சதவீதம் சூரி இருப்பார் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ஒருத்தர் கூட வாங்கலயே!.. லால் சலாம் படத்துக்கு இப்படி ஒரு நிலமையா?!.. ஐயோ பாவம்…