Cinema History
அதெல்லாம் இல்லை… கில்லி படத்தின் வீடு இதுதான்… சீக்ரெட்ட லீக் பண்ணிட்டாங்களே!..
Ghilli: நடிகர் விஜயின் நடிப்பில் வெளிவந்து பல வருடங்களை கடந்தது கில்லி திரைப்படம். இப்படத்தின் ரிரிலீஸும் ஹிட்டடித்துள்ள நிலையில் கில்லி படத்தின் வீடு குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தரணி இயக்கத்தில் ஸ்ரீ சூரியா மூவிஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் கில்லி. இப்படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தெலுங்கு திரைப்படத்தின் ஒக்கடுவின் ரீமேக்காக இப்படம் உருவானது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை வச்சு படம் பண்ணா பிஎம்டபுள்யூ காரா? போஸ்ட் போட்டு ஷாக் கொடுத்த இயக்குனர்
வித்யாசாகர் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வைரலானது. விஜயின் கேரியரில் கில்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. உலகளாவில் இப்படம் மீண்டும் ரிலீஸ் செய்த நிலையில் செம வரவேற்பு பெற்று வருகிறது.
இப்படத்தின் பேச்சுக்கள் எழுந்த நிலையில் தரணி தான் இயக்க வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் உறுதியாக இருந்தார். ஏற்கனவே தூள் மற்றும் தில் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த தரணி தான் கில்லியை சரியாக கொடுப்பார் என்பது ஏ.எம்.ரத்னத்தின் முடிவாக இருந்தது.
இதையும் படிங்க: எம்ஜிஆர் – சிவக்குமாருக்கு இடையே இப்படி ஒரு பிரச்சினை இருந்ததா? 100வது பட விழாவில் நடந்த சம்பவம்