அந்த விஷயத்துக்கு காசை கறக்கும் கவுண்டமணி! ரம்பாவுக்கும் காசு கொடுத்தாரா? இது என்ன புதுசா இருக்கு?

Published on: May 26, 2024
ramba
---Advertisement---

Rambha Goundamani: இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் கவுண்டமணிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கவுண்டமணியை குறித்து சில சுவாரசியமான தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் சபிதா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். முதன்முதலில் கவுண்டமணி என்ற பெயரில் டைட்டில் கார்டு வந்தது 16 வயதினிலே திரைப்படத்தில் தான் என அனைவருக்கும் தெரியும்.

அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து ஹீரோவுக்கு இணையான புகழை பெற்றார் கவுண்டமணி. அவர் ஹீரோவாக கிட்டத்தட்ட 12 படங்களில் நடித்திருக்கிறாராம். அதில் மூன்று படங்கள் வெற்றிகரமாக ஓடியது. மற்ற படங்கள் சரிவர வரவேற்பை பெறாததால் மீண்டும் நகைச்சுவை ரூட்டுக்கு தாவி இருக்கிறார். அதன் பிறகு ஹீரோக்களுடனே படம் முழுவதும் ட்ராவல் செய்யும் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து காமெடி கிங் என்ற பெயரை பெற்றார் கவுண்டமணி.

Also Read

இதையும் படிங்க: கேஜிஎஃப் இயக்குநருடன் சண்டை போட்ட பிரபாஸ்!.. அந்த படம் அவ்ளோதான் இனி வராதுன்னு சொல்றாங்க?..

அதிலும் குறிப்பாக செந்திலுடன் இவர் செய்யும் அட்ராசிட்டி அனைவரையும் கவர்ந்தது. விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கும் போது செந்தில் கவுண்டமணி ஜோடி இந்த படத்தில் இருக்கிறதா என்று கேட்டு தான் அந்த படத்தையே வாங்குவார்கள். அந்த அளவுக்கு இருவருமே மிகப்பெரிய புகழின் உச்சத்தை அடைந்தனர். கவுண்டமணியை பொறுத்த வரைக்கும் ஒரு நாளைக்கு இவ்ளோ சம்பளம் என்ற அடிப்படையில் தான் படத்திலேயே நடிக்க வருவார்.

அதனாலேயே இவருடைய கால்சீட்டை மூன்று நான்கு நாட்களுக்குள் முதலில் எடுத்து முடித்து விடுவார்களாம். இந்த நிலையில் அவரைப் பற்றி பல சர்ச்சைகள் அந்த காலத்தில் எழுந்த வண்ணம் இருந்தன. இப்போதெல்லாம் சோசியல் மீடியாக்கள் வளர்ந்த காலம் .அதனால் ஒரு செய்தி வெளியானால் அது பல சேனல்களில் பரவி வைரலாகி வருகின்றது. ஆனால் அந்த நேரத்தில் அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் சரிவர தெரியாமல் போய்விட்டது.

இதையும் படிங்க: கர்ப்ப காலத்திலும் நடிப்புதான் முக்கியம்! அப்படி நடித்த சீரியல் நடிகைகளின் லிஸ்ட் இதோ

ஆனால் அவருடன் நடித்த ஒரு நடிகை சமீபத்தில் ஒரு youtube சேனலில் கவுண்டமணியை பற்றி சொன்ன பிறகுதான் இப்படிப்பட்டவரா கவுண்டமணி என நமக்கு தெரிய வந்தது. இதில் பத்திரிக்கையாளர் சபிதா கவுண்டமணியை பற்றி கூறும் போது பல நடிகைகளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்திருக்கிறார் கவுண்டமணி என கூறினார். அந்த நெருக்கம் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்ள அந்த நடிகைகளுக்கு தேவையான கூலியை கொடுத்து விடுவாராம்.

அதனால் அந்த நேரத்தில் இந்த மாதிரி செய்து வெளிவராமல் கவுண்டமணி பார்த்துக்கொண்டார் என சபிதா கூறினார். அந்த வகையில் ரம்பாவுக்கும் 25 ஆயிரம் ரூபாய் கவுண்டமணி கொடுத்ததாகவும் அது ரம்பா வீட்டில் அந்த நேரத்தில் நடந்த ரெய்டில் சிக்கியதாகவும் அப்போதைய பத்திரிகைகளில் செய்தி வெளியானது என சபிதா கூறினார். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

இதையும் படிங்க: பிரம்மாண்டமான செட் போட்ட தமிழ் சினிமா உலகம்… டி.ராஜேந்தருக்கே முன்னோடி இவங்கதானாம்!