கண்ணதாசன் எழுதிய பாடலில் நாத்திகமா? எந்தப் படம்னு தெரியுமா?
கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தில் இப்படி தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் அவர் நாத்திகராகத் தான் இருந்தாராம். அதுவும் 2ல் இருந்து 3 ஆண்டுகள் வரை அப்படி இருந்துள்ளார்.
கம்பரசம்
அண்ணாவின் கம்பரசம் என்ற நூல் அதனால் தான் அவரைக் கவர்ந்ததாம். அந்தப் புத்தகத்தில் கந்தபுராணத்தில் இருந்து நாலாயிர திவ்விய பிரபந்தம் வரை கடவுளையும், புராணங்களையும் கேலி செய்து எழுதப்பட்டு இருந்தது.
அதனால் அந்தப் புத்தகத்தில் உள்ள பாடல்களை மனப்பாடமும் செய்தாராம். கம்பனுக்கும் அடிமை ஆகிவிட்டாராம். அதன்பிறகு எப்படியோ மனம் மாறி அர்த்தமுள்ள இந்துமதம், பகவத்கீதை, அபிராமி அந்தாதி, இயேசுகாவியம் என ஆன்மிகம் பக்கம் திரும்பி நூல்களாக எழுதிவிட்டார்.
அவர் எழுத்தில் ஒரு பழைய பாடல் அற்புதமாக வந்தது. அதை ஆத்திகமா, நாத்திகமா என்று கண்டுபிடிப்பதே சிரமம். அந்த அளவுக்கு அர்த்தம் பொதிந்து அவர் எழுதிய பாடல் தான் அது.
துலாபாரம் கதை
1969ல் வெளியான படம் துலாபாரம். இந்தப் படம் மலையாளத்தில் இருந்து ரீமேக்காகி தமிழுக்கு வந்தது. சாரதா நடித்தார். படத்தின் கதை இதுதான். நீதிமன்றத்தில் துவங்குகிறது. அங்கு 3 குழந்தைகளைக் கொலை செய்த குற்றவாளி தாயாக கதாநாயகி நிற்கிறாள்.
Also read: அந்த விஷயத்துல நான் கமல் சாரை விட பெஸ்ட்!.. இப்படி சொல்லிட்டாரே மிர்ச்சி சிவா!..
அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்கிறார் அரசுதரப்பு வழக்கறிஞர். இவர் யார் என்றால் கதாநாயகியின் தோழி. காஞ்சனா இந்தக் கேரக்டரில் நடித்துள்ளார். அதே நேரம் கதாநாயகியும் எனக்குத் தூக்குத் தண்டனை கொடுங்க என கேட்கிறார்.
பிளாஷ்பேக்
பிளாஷ்பேக்கில் என்ன நடக்கிறது என்றால் காலேஜ்ல பணக்கார மாணவன் முத்துராமனுடன் சாரதாவுக்கு ஒரு தலை காதல். சாரதாவின் தந்தை மேஜர் சுந்தரராஜன். சொத்து பிரச்சனை ஒன்றில் சுந்தரராஜனுக்கு எதிராக வழக்கு தொடுத்த விஎஸ்.ராகவனுக்கு சாதகமாகத் தீர்ப்பு வருகிறது.
அதனால் அவர் சொத்துகளை இழந்த சோகத்தில் சுந்தரராஜன் இறந்து விடுகிறார். அதே நேரம் முத்துராமனும் தான் காதலிக்கவில்லை. தங்கையாகத் தான் நினைத்தேன் என்று சொல்லி விடுகிறார். அந்த நிலையில் ஏழையான ஏவிஎம்.ராஜனை மணந்து கொள்கிறாள்.
அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறக்கிறது. ராமுவோ தனக்கு சம்பள உயர்வு கேட்டு போராடுகிறார். இதில் அவர் நிறுவனத்தின் அடியாள்களால் கொலை செய்யப்படுகிறார். அந்தநிலையில் குழந்தைகள் பசியால் தவிக்கிறது. சாரதா வறுமையின் பிடியில் இருந்து தவிக்கிறாள். இதனால் தற்கொலைக்கு முயல்கிறாள். குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் சாப்பிட முயற்சிக்கும்போது கைதாகிறாள்.
நாத்திக பாடல்?
Also read: பாலிவுட் என்ட்ரி!.. மும்பை புரமோஷனில் ஓபனாக பேசிய அல்லு அர்ஜுன்.. அப்படி என்ன சொன்னாரு?..
படத்தில் ஒரு சோகப்பாடல் வருகிறது. அதில் கண்ணதாசன் ஆண்டவனும் கோவிலில் தூங்கி விடும்போது யாரிடத்தில் கேள்வி கேட்பது.... ஏழைகளின் ஆசையும் கோவில் மணி ஓசையும் வேறுபட்டால் என்ன செய்வது என்று அழகாக எழுதி இருந்தார். இந்தப் பாடலின் வரிகளைக் கவனித்தால் கண்ணதாசன் நாத்திக கண்ணோட்டத்தில் தான் எழுதி இருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஏனென்றால் கடவுள் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார் என்று படித்துள்ளோம். ஆனால் கோவிலில் தூங்கிக் கொண்டு இருக்கிறார் என்பது புதுமையாக உள்ளது. அது படத்தில் வரும் கதாபாத்திரத்தின் தாங்க முடியாத மனக்குமுறலால் எழுந்த வரிகள் தான். வேறொன்றுமில்லை.