தமிழ்ப்படம் ஹீரோயினா இவங்க!.. சேலையில் இவ்ளோ தாறுமாறா இருக்காங்களே!..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தற்போது பகிர்ந்துள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ishwarya

நடிகை ஐஸ்வர்யா மேனன், தற்போது வெள்ளை நிற புடவையில் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யா மேனன், தனது நடிப்பு மட்டுமின்றி வித்தியாசமான போட்டோஷூட்கள் மூலமாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஆப்பிள் பெண்ணே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அதன்பின்னர் தமிழ்ப்படம் 2.0, நான் சிரித்தால், வேழம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நிகில் நடிப்பில் வெளியான ஸ்பை திரைப்படத்திலும் நடித்திருந்தார். மேலும் மலையாளத்தில் மம்மூட்டியுடன் நடித்த பசூக்கா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், அவரது புதிய வெள்ளை புடவை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட இளைஞர்கள் ரசிகர்களாக உள்ள நிலையில், அடிக்கடி இப்படி கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ட்ரீட் வைத்து வருகிறார்.

CR
ஆசிரியர்

adminram

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →