நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. வெள்ளை நிற உடையில் ஸ்டைலிஷ் லுக்கில் போஸ் கொடுத்துள்ள ரகுல் ப்ரீத் சிங், அந்தப் புகைப்படங்களுடன் “Life is too short to not shine a little extra” என பதிவிட்டுள்ளார்.

ரகுலின் இந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. சமீப காலமாகவே பல்வேறு நிகழ்ச்சிகளில் விதவிதமான உடைகளில் தோன்றி வரும் அவர், ஃபேஷன் தொடர்பான புகைப்படங்களையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

மேலும், நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ராமாயணா படத்தில் ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பணகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 6, 2026 அன்று வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சமூக வலைதளங்களில் தனது ஃபேஷன் புகைப்படங்களால் கவனம் ஈர்த்து வரும் ரகுல் ப்ரீத் சிங், மறுபுறம் ‘ராமாயணா’வில் சூர்ப்பணகை என்ற வித்தியாசமான கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை வசீகரிக்க காத்திருக்கிறார்.

ஒரு காலத்தில் ஹீரோயினாக அசத்திய ரகுல் ப்ரீத் சிங் தற்போது இந்தி படங்களில் சைடு ரோலில் நடித்து வருகிறாரே என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.







