எல்லாத்துக்கும் முன்னோடியா இருக்கும் கமலுக்கே தண்ணி காட்டிய விஜய்! மரண பயத்தை காட்டிய தளபதி

Published on: March 12, 2024
kamal
---Advertisement---

Kamal Vijay: இன்று சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களின் அடுத்த இலக்காக இருப்பது அரசியல்தான். எம்ஜிஆர் முதல் இன்றைய தலமுறை நடிகர்கள் வரை அனைவரும் அரசியலை நோக்கியே பயணம் செய்கின்றனர். இதில் எம்ஜிஆரின் சாதனையை இதுவரை எந்த நடிகரும் அடைந்தது இல்லை. சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி ஒரு பெரும் ஆளுமையாக இருந்தவர் எம்ஜிஆர்.

அவரை போல் ஒருவர் இனி சினிமாவில் யாரும் கிடையாது என்றே பல பேர் கூறி வருகிறார்கள். ஆனால் ரஜினி அந்த இடத்தை அடைய வேண்டும் என நினைத்தார். விதி அவரை அரசியலுக்குள் நுழைய விடவில்லை. அதன் பிறகு கமல் அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறார். இதில் திமுக-வுடன் கூட்டணி என நேற்று திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

இதையும் படிங்க: அஜித் துடிச்ச துடிப்பு இருக்கே! கண்ணார பார்த்து கதறிய நடிகர்.. ‘தல’க்குள்ளே இவ்ளோ ரணமா?

இவர்கள் வரிசையில் நடிகர் விஜய் அடுத்தக்கட்ட இலக்கினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். விஜயை அரசியலில் ஒரு பெரும் ஆதிக்கம் செலுத்தும் அரசியல்வாதியாக எதிர்பார்க்கலாம் என்றே பல தரப்பினர் கூறிவருகிறார்கள். ஏனெனில் சினிமாவில் பீக்கில் இருக்கும் போதே சினிமா போதும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் அரசியலுக்குள் வந்தவர் விஜய்.

அதனால் அவருடைய ரசிகர்கள் பக்க பலமாக இருப்பார்கள் என்று தெரிகிறது. இதற்கிடையில் விஜய் சமீபத்தில் அவருடைய கட்சி சார்பாக ஒரு செயலியை அறிமுகம் செய்தார். அதன் மூலம் வாக்காளர்களை சேர்க்கும் பணி ஆரம்பமானது. அந்த செயலி ஆரம்பித்த இரண்டு நாள்களிலேயே 50 லட்சம் உறுப்பினர்கள் விஜய் கட்சியில் சேர்ந்திருக்கின்றனர். இது மற்ற கட்சி பிரமுகர்களை பீதியடைய வைத்திருக்கிறது.

இதையும் படிங்க: இப்படி எல்லாரும் பாட்டு பாடிட்டு இருக்கீங்களே… கடுப்பான விஜயா, ரோகினி… நாங்களும் தான்!…

இதே போல்தான் கமலும் அரசியலுக்குள் வந்ததும் ஒரு செயலியை ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அது ஆரம்பித்ததோடு சரி. இந்தளவுக்கு உறுப்பினர்கள் அவர் கட்சியில் சேர வில்லை என்பதுதான் உண்மை. விஜயின் இலக்கு எப்படியாவது2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதுதான். 2 நாள்களிலேயே 50 லட்சம் பேர் என்றால் இன்னும் நாள்கள் இருக்கிறது. அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.