Cinema News
வசூலில் தெறிக்கவிடும் சூப்பர்ஸ்டார்!.. கோடிகளை குவிக்கும் ஜெயிலர்.. 6 நாள் வசூல் இதுதான்!…
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால், கடந்த சில வருடங்களாக சில படங்களை தவிர அவரின் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, ஒரு பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்கிற முனைப்பில் ரஜினி நடித்த திரைப்படம்தான் ஜெயிலர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் இயக்க ரஜினி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவ்ராஜ்குமார், யோகிபாபு, சுனில், வினாயகன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த 10ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: இமயமலையில் டிரக்கிங்!.. பாபா குகையில் தியானம்!.. தீயாக பரவும் ரஜினியின் புகைப்படங்கள்!…
சமூகவலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இப்படத்தை பார்க்க பலரும் ஆர்வம் காட்டினார்கள். தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. வெளிநாடுகளில் பல கோடிகளில் முன்பதிவும் நடந்தது.
ரஜினி ரசிகர்களை இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். ஏனெனில், ரஜினியை விஜயோடு ஒப்பிட்டு கடந்த சில மாதங்களாக பலரும் பேச இந்த வெற்றி அவர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. அதுவும் விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என சிலர் கொளுத்திப்போட ஜெயிலர் பட விழாவில் ரஜினி பருந்து – காக்கா கதையை சொல்ல வேண்டியிருந்தது.
இதையும் படிங்க: அதுக்குள்ள ஓடிடி ரிலீஸா?.. ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் எந்த ஓடிடியில், எப்போ ரிலீஸாகுது தெரியுமா?..
அதனால் விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் கடுமையாக மோதிக்கொண்டனர். இந்த நிலையில்தான் ஜெயிலர் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. படம் வெளியாகி 6 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் தமிழகத்தில் ரூ.112 கோடியும், கேரளாவில் ரூ.33 கோடியும், கர்நாடகாவில் ரூ.43 கோடியும், ஆந்திரா – தெலுங்கானா சேர்த்து ரூ.46 கோடியும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும், வட இந்தியாவில் ரூ.7 கோடியும், வெளிநாடுகளில் ரூ.140 கோடியும் சேர்த்து மொத்தமாக இதுவரை ஜெயிலர் திரைப்படம் ரூ.381 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சிலரோ இப்படம் ரூ.400 கோடியை தாண்டிவிட்டதாக 5ம் நாளான நேற்றே பதிவிட துவங்கிவிட்டனர்.என்ன வசூல் என்பதை விரைவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: லியோ கதை!.. அர்ஜுனின் என்ட்ரி இடைவேளையில் தானா!.. இதில் டீகோடிங் செய்ய இத்தனை விஷயம் இருக்கா?..