latest news

Sigma Box Office: 3 நாட்களில் சிக்மா செய்த வசூல் இவ்ளோதானா?

விஜய் மகன் இயக்கியுள்ள படம் ‘சிக்மா’.

கோலிவுட்டின் டாப் ஹீரோவும், இப்போதைய தமிழ்நாட்டின் முதல்வருமான ‘தளபதி’ விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ சமீபத்தில் தான் வெளியானது. ‘தளபதி’-யை தொடர்ந்து அவரது மகன் ஜேசன் சஞ்சய்யும் தமிழ் திரையுலகில் கால் பதித்திருக்கிறார்.

ஆனால், ஹீரோவாக இல்லை, ஒரு இயக்குநராக. ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் முதல் படம் தான் ‘சிக்மா’. இப்படம் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய ரெண்டு மொழிகளிலும் தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.

‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். ஹீரோயினாக ஃபரியா அப்துல்லா வலம் வந்துள்ளார்.

இப்படத்திற்கு அதிகமாக நெகட்டிவ் விமர்சனங்களே வந்த வண்ணமிருக்கிறது. பாக்ஸ் ஆபிஸில் கடந்த 3 நாட்களில் உலக அளவில் ரூ.6.10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.

Author
siva ✓