நடிகர் ஜீவா நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தலைவர் தம்பி தலைமையில். இந்தப் படத்தை நிதிஷ் சஹாதேவ் இயக்கியிருக்கிறார். விஷ்ணு விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பொங்கல் ரிலீஸாக ஜனவரி 15 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆனது. ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆகாததால் இந்த மாதிரி சின்ன படங்கள் ரிலீஸ் தேதியை லாக் செய்து கொண்டன.
அந்த வகையில் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படமும் ரிலீஸ் ஆனது ஒரு பக்கம் பராசக்தி இன்னொரு பக்கம் வா வாத்தியாரே என இரு பெரும் நடிகர்களின் படங்கள், அதனால் ஜீவாவின் படம் நின்னு ஆடுமா என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி. அந்த இரு படங்களையும் ஓரங்கட்டி ஜீவாதான் பொங்கல் விருந்தை கொடுத்திருக்கிறார்.
ஃபேமிலி ஃபேமிலியாக இந்தப் படத்தை வந்து பார்த்து மகிழ்கின்றனர். இதுவரை எந்தவொரு நெகட்டிவ் விமர்சனங்களும் இந்தப் படத்திற்கு வரவில்லை. பாசிட்டிவ்வான விமர்சனங்களே வந்த வண்ணம் இருக்கின்றன. படத்தில் தம்பி ராமையா மற்றும் இளவரசு இவர்களின் கேரக்டர் சுற்றித்தான் படமே நகர்கிறது. ஒரு கிராமத்து பஞ்சாயத்து தலைவராக ஜீவா வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார்.
ஒரு பக்கம் சாவு வீடு, இன்னொரு பக்கம் கல்யாண வீடு என இரு வீட்டாருக்கும் இடையே நடக்கும் பிரச்சினையை எப்படி சமாளிக்கிறார் ஜீவா என்பதுதான் கதையே. ஒரு வித்தியாசமான கதைகளத்தில் படம் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் ஜீவாவுக்கும் போகிற இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் ஒரு டையலாக் வரும்.
படிச்சு படிச்சு சொன்னேனடா.. கண்டீசன ஃபாலோ பண்ணுங்க.. கண்டீசன ஃபாலோ பண்ணுங்கனு என்ற டையலாக் வரும். அந்த டையலாக் வரும் போது ஒட்டுமொத்த திரையரங்குமே ஆரவாரத்தில் கத்தினார்கள். அந்த டையலாக்கை இந்த இடத்தில் வைத்தால் நன்றாக இருக்கும் எனசொன்னது இயக்குனர்தான். நானும் ஏதோ வெகுளியாக பேசிவிட்டேன். ஆனால் அதற்கு இப்படியொரு ரெஸ்பான்ஸ் கிடைக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை என ஜீவா கூறினார்.




