எந்த தைரியத்தில் இந்த முடிவு?… ரஜினியின் ஜெயிலர் 2வுடன் மோதும் ஜீவா படம்!
‘ஜெயிலர் 2’ படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார்.

ஆல்ரெடி வருகிற அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி நம்ம கோலிவுட்டின் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரிலீஸ் என ‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன் நாள் குறித்து விட்டார்.
இதற்கு அடுத்த நாள் அக்டோபர் 16-ஆம் தேதி நடிகர் தனுஷ், தனது ‘ஓம்’ படத்தை போட்டிக்கு விடுவோம் என்று முதலில் நினைத்தார். இப்போது அதுவே தள்ளிப் போவதாக சொல்கிறார்கள்.
இதற்கிடையில் நேற்று வேற நம்ம விஜய் ஆண்டனி அவரது ‘அப்பா குட்டி’ படத்தை அக்டோபர் 16-ஆம் தேதி ரிலீஸ் செய்யப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டார்.

தற்போது, இதே அக்டோபர் 16-ஆம் தேதி நடிகர் ஜீவா – ‘SMS’ ராஜேஷ்.எம் காம்பினேஷனில் உருவாகியுள்ள ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படமும் ரிலீஸ் ஆகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் தலைவர் படம் ரிலீஸ் ஆகுது, அதுவும் ஆல்ரெடி மெகா ஹிட்டான படத்தின் பார்ட் 2. அப்படி இருந்தும் எந்த தைரியத்தில் ஜீவா இந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை என ரசிகர்கள் புலம்புகிறார்கள்.












